twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் சினிமாவின் சிறந்த தேசபக்தி பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Sunday, August 21, 2022, 01:08 PM [IST]

    தமிழ் சினிமாவில் உள்ள தேசபக்தி பாடல்கள் சில இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய தேசபக்தி கதைக்களம் கொண்டுள்ள வெற்றி படங்கள் மற்றும் அந்த படங்களில் இடம் பெற்றுள்ள சிறந்த தேசபக்தி பாடல்கள் என இங்கு உள்ளது. இந்த தரவரிசையில் ஜெய்ஹிந்த், கப்பலோட்டிய தமிழன், பாரதி, ரோஜா, பாரத விலாஸ் ஆகிய தமிழ் படங்கள் மற்றும் அந்தந்த படங்களின் புகழ் பெற்ற பாடல்களான வந்தே மாதரம், என்று தணியும் இந்த சுதந்திர தாகம், தமிழா தமிழா, கப்பல் ஏறி போயாச்சு என தேசபக்தி பாடல்கள் உள்ளது.

    cover image

    கப்பலோட்டிய தமிழன்

    நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியாகி பல விருதுகளை வென்று பிரபலமான திரைப்படம் "கப்பலோட்டிய தமிழன்". இப்படத்தில் இடம் பெற்றுள்ள "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" சுப்ரமணிய பாரதி எழுதிய பாடல் ஒன்றினை பாடல் பாடகர் திருச்சி லோகநாதன் பாடியுள்ளார். இப்படத்தின் இடம் பெற்றுள்ள அணைத்து பாடலுமே சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் ஆகும்.

    பாரதி

    தனது பாடல்கள் மூலம் இந்தியாவில் பலருக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய கவிஞர் பாரதியார். இவரது வாழ்க்கையை ஒரு படமாக 2000-ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளனர் தமிழ் திரையுலகினர். தமிழில் இவர் எழுதிய பாடலான "வந்தே மாதரம்" என்ற பாடலை இவரது திரைப்படத்தில் சுதந்திரத்திற்காக இவர் பாடும் காட்சியாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தழுவி புதிய இசை நுணுக்கங்கள் மற்றும் இசை கருவிகள் மூலம் இப்பாடலை இன்றை இளைஞர்கள் பலர் பாடியுள்ளனர்.

    கப்பலோட்டிய தமிழன்

    "வந்தே மாதரம் எண்போம்" என்ற பெரும் முழக்கத்தோடு உருவான இப்பாடல், தமிழ் சினிமாவில் பலரை கவர்ந்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியாகி பல விருதுகளை வென்று பிரபலமான திரைப்படம் "கப்பலோட்டிய தமிழன்". இத்திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதி என்னும் பாரதியார் ஆவார்.

    ரோஜா

    ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் தேசிய உற்றுமையை குறிப்பிடும் வகையில் அமைந்து வெளியானது. இப்பாடல் இத்திரைப்படம் முடியும் காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இத்திரைப்படமானது இசையமைப்பாளர் "இசைப்புயல்" ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும்.

    ஜெய் ஹிந்த்

    1994-ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள அதிரடி திரைப்படம் "ஜெய்ஹிந்த்". இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தேசபக்தி படமாக உருவான இப்படம் இன்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ளது.

    நாம் இருவர்

    1947-ஆம் ஆண்டு "நாம் இருவர்" என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள தேசப்பற்று உடைய திரைப்படம். தேசப்பற்று சார்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் கதையில் இடம் பெற்றுள்ள அணைத்து பாடல்களுமே தேசபக்தி பாடல்கள் தான். மக்களின் பேராதரவில் பிரபலமான தேசபக்தி பாடலாக "மஹான் காந்தி மஹான்" என்னும் பாடல் இப்படத்தில் புகழ் பெற்றுள்ளது. இப்பாடலை எழுதியவர் கே.பி. காமாட்சி சுந்தரம், பாடியவர் எம். எஸ். ராஜேஸ்வரி.

    கப்பலோட்டிய தமிழன்

    நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியாகி பல விருதுகளை வென்று பிரபலமான திரைப்படம் "கப்பலோட்டிய தமிழன்". "தண்ணீர் விட்டு வளர்த்தோம்" பாடலை சுப்ரமணிய சிவா என்னும் பாரதியார் பாடல் வரிகளில் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடியுள்ளார். 

    பாரத விலாஸ்

    பாரத விலாஸ் என்னும் குடும்பத்திரைப்படமாக 1973-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படம், இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள "இந்திய நாடு நம் நாடு" திரைப்பாடல் பாடலாசிரியர் வாலி வரிகளில் எம். எஸ். விஸ்வநாதன், சௌந்தராஜன், சுசீலா, மலைசிய வாசுதேவன் என திரைப்பட பின்னணி பாடல்கள் பலர் குரலில் உருவாகியுள்ளது.

    இந்தியன்

    இயக்குனர் ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு அதிரடி மற்றும் சமுதாய அக்கறைகள் உடைய தேசபக்தி திரைப்படம். இப்படம் பல விருதுகளை வென்றுள்ள பிரபல திரைப்படம். இப்படத்திற்கான ரசிகர்கள் இன்றும் திரையுலகில் பலர் உள்ளனர். இரட்டை கதாபாத்திரத்தில் பல வேடங்களில் நடிகர் கமல் ஹாசன் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் கதையில் இடம் பெற்றுள்ள "கப்பல் ஏறி போயாச்சு" திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தேசபக்தி கருத்துகள் உள்ளடங்கிய இப்பாடல் பல பாராட்டுகளையும் வென்றுள்ளது.

    இந்திரா

    அரவிந்த் சாமி, அணு ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் "அச்சம் இல்லை அச்சம் இல்லை" என்னும் மகாகவி பாரதியின் பாடல் முழக்கத்தில் தொடங்கி பல ரசிகர்களை கவர்ந்து பரிபாலமானது.

    எனது இந்தியா

    சுதந்திர தின ஸ்பெஷல் பாடலாக இணையத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட தேசப்பற்று பாடல். இப்பாடல் தமிழில் உருவாகி வெளியானது

    வந்தே மாதரம்

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இணையத்தில் தணிக்கையாக சுதந்திரம் தினம் மற்றும் குடியரசு தினத்திற்காக உருவாக்கப்பட்ட தேசப்பற்று பாடல். "தாய் மண்ணே வணக்கம்" என்ற சொற்களில் தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்பாடல் எந்த படங்களிலும் இடம் பெறாமல் தணிக்கையாக ஒரு ஆல்பம் பாடலாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X