X
முகப்பு சினி தரவரிசை

பொன்னியின் செல்வன் 02 டிரைலர் - எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்னம்

Author Sakthi Harinath | Updated: Tuesday, April 4, 2023, 08:09 PM [IST]

2023, ஏப்ரல் மாதம் 28ல் உலகமெங்கும் வெளியாகும் பொன்னியின் செல்வன் பார்ட் 02 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் கலக்கி வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி நெட்டிசன்கள் மற்றும் திரை ரசிகர்களுக்கு இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரங்கள் இதோ.


cover image
பொன்னியின் செல்வன் (PS 1)
1

எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம். வரலாற்று கதைக்களத்தில் பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பெரிய அளவில் திரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் 500 கோடிகள் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

2

இயக்குனர் மணிரத்னம் இயக்க - விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், சரத்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரொடக்ஷ்ன்' நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுபாஷ்கரன் இப்படத்தினை தயாரித்து உலகம் முழுவதும் இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

 

பொன்னியின் செல்வன் (PS 1)
3

இயக்குனர் மணிரத்னம் சுமார் 500 கோடி பொருட்செலவில் பொன்னியின் செல்வன் (பாகம் 01 & பாகம் 02) திரைப்படங்களை இயக்கிவிட்டார். 2022ல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட்ட படக்குழு இப்படத்தின் மூலம் மட்டும் சுமார் 500 கோடிகள் திரையரங்கு கலெக்ஷன்ஸ் மட்டும் வசூலித்துள்ளனர். இதை தவிர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை, பாடல் உரிமை, வெவ்வேறு மாநில வெளியீட்டு உரிமைகள் என பல கலெக்ஷன்ஸ் உள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் தயாரிக்க செலவான மொத்த பட்ஜெட்-யை முதல் பாகத்தில் படக்குழு வசூலித்துவிட்டனர்.

பொன்னியின் செல்வன் 2
4

பொன்னியின் செல்வன் 02 திரைப்படம், 2023 ஏப்ரல் 28ல் உலகமுழுவதும் வெளியாக தயாராக உளள்து. இப்படத்தின் பாடல் 'அக நக' பாடல் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தொடர்ச்சி கதைக்களத்தில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராகிவுள்ளது.

5

பொன்னியின் செல்வன் 02 திரைப்படத்தின் டிரைலர், 2023 மார்ச் 29ல் படக்குழு சார்பில் வெளியாகி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் பாகத்தின் டிரைலர் சுவாரஸ்யம் மிகுந்த பல காட்சிகள் உள்ளடக்கி பிரமாண்ட முறையில் வெளியாகி இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பொன்னியின் செல்வன் 02 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு பின் இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+