twitter
    X
    Home சினி தரவரிசை

    திருநங்கை கதாபாத்திரத்தில் கலக்கிய தமிழ் முன்னணி நடிகர்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, February 10, 2023, 01:36 PM [IST]

    திரைப்படங்களின் திரைக்கதைக்கு ஏற்றவாறு எவ்வீத தயக்கமும் இன்றி தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்து முடிக்கின்றனர் தமிழ் நடிகர்கள். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும், சஞ்சலமும் இன்றி நடித்து படங்களின் திரைக்கதைக்கு வலுசேர்க்கின்றனர். திருநங்கை கதாபாத்திரத்தில் 2000-ஆம் ஆண்டு அப்பு படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து இதனை தமிழ் திரையில் தொடங்கியுள்ளார். இவரை தொடர்ந்து பல தமிழ் முன்னணி நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் திரைப்படத்தில் இந்த திருநங்கை கதாபாத்திரத்தில் லாரென்ஸ் போன்ற நடிகர்கள் முதல் கமல்ஹாசன், விக்ரம் போன்ற பிரபல முன்னணி நடிகர்கள் வரை திரைப்படங்களில் திருநங்கையாக நடித்து பல விருதுகளை வென்றுள்ளனர். இங்கு தமிழ் திரைப்படங்களில் திருநங்கையாக நடித்துள்ள நடிகர்களை அவர்களின் திரைப்பட கதாபாத்திரத்தை ஒப்பிட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

    cover image
    அப்பு

    அப்பு

    1

    அப்பு திரைப்படத்தில் வில்லனாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்தவர், பிரகாஷ் ராஜ். இவரே தமிழ் திரையுலகில் முதன் முதலில் திருநங்கை வேடம் அணிந்து நடித்துள்ள முன்னணி நடிகர் ஆவார்.

    காஞ்சனா

    காஞ்சனா

    2

    காஞ்சனா திரைப்படத்தில் ஒரு முக்கிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவரின் மாஸ் தோற்றங்களை பொருட்படுத்தாமல் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த துணைநடிகருக்கான விருதுகள் பல வென்றுள்ளார்.

    ஆதிபகவன்

    ஆதிபகவன்

    3

    ஆதிபகவன் திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள இவர், ஒரு வேடமாக திருநங்கை தோற்றத்தில் நடித்துள்ளார். இவரின் இந்த நடிப்பு பல திரையுலக பிரபலங்களால் பாராட்டப்பட்டது. திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நேரத்தில் இவர் நடித்த இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது.

    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    4

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நேரத்தில் 2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ், இத்திரைப்படத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து புகப்பெற்றுள்ளார். இதற்காக சர்வதேச அளவில் விருதுகளையும் வென்றுள்ளார்.

    இருமுகன்

    இருமுகன்

    5

    இருமுகன் திரைப்படத்தில்  திருநங்கையாகவும், நாயகனாகவும் நடித்துள்ளார். ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்கும் இவர் இத்திரைப்படத்தின் திரைக்கதை வலுவிற்காக திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

    காஞ்சனா

    காஞ்சனா

    6

    காஞ்சனா படத்தினை இயக்கி தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், ராகவா லாரென்ஸ். இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் இவர் ஒரு திருநங்கை போல நடித்து அசத்தியுள்ளார். இதற்காக இவர் பல பாராட்டுகளையும் விருதுகளை வென்றார். இந்திய சினிமாவில் பெரிய அளவில் இப்படம் பேசப்பட்டு ஹிந்தியில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    முரட்டு காளை

    முரட்டு காளை

    7

    கதாநாயகனும், வில்லன்களும் நடிக்கும் கதாபாத்திரமாக இல்லாமல் நகைச்சுவையாக இந்த திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தியுள்ளார், நடிகர் விவேக். இவரின் இந்த கதாபாத்திரம் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு பிரபலமானது.

    பாவக்கதைகள்

    பாவக்கதைகள்

    8

    சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமானவர், காளிதாஸ் ஜெயராம். பாவக்கதைகள் என்ற ஒரு ஆன்லைன் நெட்பிலிக்ஸ் செயலியில் வெளியான இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X