X
முகப்பு சினி தரவரிசை

The Goat Blockbuster: சரித்திரம் படைத்தது தி கோட்... முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

Author Sakthi Harinath | Published: Friday, September 6, 2024, 01:37 PM [IST]

The Goat Blockbuster: சரித்திரம் படைத்தது தி கோட்... முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?. இந்த பட்டியலில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்பட முதல் நாள் வசூல் விவரங்கள் பற்றிய முழு அப்டேட் தகவல்கள் விரிவாக இங்கு உள்ளது. உலகம் முழுவதும் செப் 5, 2024ல் வெளியான தி கோட் திரைப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் நிலவரம் இதோ.


cover image
Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68வது திரைப்படமாகும். 


தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.


Video Thumbnail

கதை - கதை

காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர்.


விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கிண்டு அங்கிருந்து வருகின்றனர்.


வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார்.


மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன்.


தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.


Video Thumbnail

விமர்சனம் ரேட்டிங் - விமர்சனம் & ரேட்டிங்

தி கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளித்து தி கோட் படத்தினை வெற்றி படமாக மாற்றியுள்ளனர், ரசிகர்கள். விறுவிறுப்பான திரைக்கதை, பல படங்கள் மற்றும் நடிகர்களின் சாயல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நோக்கத்தில் பட காட்சிகள் என இப்படத்தில் வெரைட்டி காட்டியுள்ளார், வெங்கட் பிரபு.


விமர்சனம் ரீதியில் இப்படம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் பல வலைதள பக்கங்களில் இப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் 3.5/5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.


Video Thumbnail

வெங்கட் பிரபு - வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் வெற்றி மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் லைம் லைட் வந்த இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது கோட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எண்ணங்களை திரைக்கதை மூலம் பூர்த்தி செய்துள்ளார், வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு திரைப்பயணத்தில் இவரது பெஸ்ட் மூவி பட வரிசையில் தற்போது தி கோட் படமும் இணைந்துள்ளது.


Video Thumbnail

முதல் நாள் வசூல் - முதல் நாள் வசூல்

தி கோட் திரைப்படம் 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. ரிலீசிற்கு முன்பே ஆன்லைன் மூலம் பல திரையரங்கில் டிக்கெட் புக் செய்து, ரிலீசான முதல் நாளில் பல இடங்களில் ஹவுஸ்-புல் படமாக சாதனை படைத்திருக்கிறது, தி கோட்.


தி கோட் திரைப்படம் முதல் நாள் முடிவில் உலகளவில் மொத்தம் '₹ 128 கோடிகள்' வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இப்படம் முதல் நாள் வசூல் பற்றிய அதிகாரப்பூரவ அறிவிப்பை இப்படத்தினை தயாரித்துள்ள AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது வலைதள பக்கத்தில் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+