X
தமிழ் » திரைப்படங்கள் » தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)
தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

Action | 05 Sep 2024 | U/A | 183 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் கதை

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ' தளபதி ' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட படக்குழு & பிரபலங்கள் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட வீடியோக்கள் 300 முதல் 400 கோடிகள் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், உலகமுழுவதும் 5000+ திரையில் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸ் படமாக திரைக்கு வந்துள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது.   'தி கோட்' படத்திற்கு பிரபலங்கள் பெற்ற சம்பள விவரங்கள்   தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தினை AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை தமிழகம் முழுவதும் ' ரோமியோ பிக்சர்ஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. மேலும் இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் (தமிழகம் & கர்நாடக), மைத்திரி மூவி மேக்கர்ஸ் (ஆந்திரா & தெலுங்கானா), ஜீ ஸ்டுடியோஸ் (வட இந்தியா), ஸ்ரீ கோகுலம் மூவிஸ் (கேரளா) ஆகிய நிறுவனங்கள் இந்திய முழுவதும் விநியோகம் செய்துள்ளது. தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ₹125 கோடிகளுக்கு கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தினை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் ₹93 கோடிகளுக்கு பெற்றுள்ளது.  தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட பாடல்கள் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட கதை காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர். விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கொண்டு அங்கிருந்து வருகின்றனர். வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார். மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா-வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன். தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், ஜெயராம், அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை. தி கோட் படத்தில் நடித்துள்ள கேமியோ நட்சத்திரங்கள் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட பிரத்யேக தகவல்கள் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68 வது திரைப்படமாகும். 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் வாரிசு படம் 300 கோடிகளையும், லியோ படம் 600 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து வெளியாகும் 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படம் பெரிய அளவில் சாதனை படைக்கும் என படக்குழு மற்றும் திரைப்பட விமர்சன நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படத்தில் அதிநவீன தொழில்நுட்ப உதவியோடு கிராபிக்ஸ் செய்துள்ளனர், படக்குழுவினர். டி-ஏஜிங் தொழில்நுட்ப உதவியோடு இளம் வயது விஜயை வடிவமைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்துள்ள பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயுடன் நடித்துள்ளனர். பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், ஜெயராம், வைபவ், என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் திரைப்பயணத்தில் தளபதி 69 படம் இறுதி படமாக இருக்கும் காரணத்தால் இப்படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர், இப்படம் திரில்லர் மற்றும் அதிரடி கதையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என பலர் நேர்காணலில் பேட்டி அளித்து வருகின்றனர்.
Read More

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் நடிகர்கள் & படக்குழுவினர்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் அணியின் தகவல்

இயக்குனர் வெங்கட் பிரபு
கதை வெங்கட் பிரபு
சங்கதி வெங்கட் பிரபு, விஜி
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி
தொகுப்பாளர் வெங்கட் ராஜன்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
இந்த கோட் பிளாக்பஸ்டர் தான்
Great Andhra
Greatest Weak Drama
123 Telugu
Thalapathy Vijay’s The GOAT – Fails to live up to its title
News 18
Vijay's Greatest of All Time Is a 'Blockbuster', Action Scenes Stand Out
India Today
Vijay's film has a wafer-thin plot

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் ட்ரெய்லர்

Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+