twitter
    X
    Home சினி தரவரிசை

    வாரிசுகளை தன் படத்திலையே நடிக்க வைத்த தமிழ் முன்னணி நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Published: Tuesday, November 29, 2022, 05:04 PM [IST]

    இந்திய சினிமாவில் பிரபலமான பல முன்னணி நட்சத்திரங்கள் தான் நடிக்கும் படங்களில் தனது வாரிசுகளுக்கு ஒரு சில காட்சிகள் ஒதுக்கி தன்னுடன் நடிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் வாரிசுகளை பிரபலமாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் இது போன்ற நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. டி ராஜேந்தர் தான் நடிக்கும் படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் அவரது மகன் சிலம்பரசனை நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் பிரபலமாக்கினார். பின் சத்யராஜ் அவரது படங்களில் சிபிராஜ்-யை நடிக்க வைத்துள்ளார். இவர்களை தொடர்ந்து விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல நடிகர்கள் அவர்களது வாரிசுகளை தான் நடிக்கும் படத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர். முழு தகவல்கள் இதோ.

    cover image

    1

    இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கிய படங்களில் தனது விஜய்-யை நாயகனாக நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். பின் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார். நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அறிமுக பாடல் 'நா அடுச்சா தாங்கமாட்ட' பாடலில் கௌரவ தோற்றத்தில் விஜய் தன் மகன் சஞ்சய்யை அறிமுகப்படுத்தினார். பின் இயக்குனர் அட்லீ இயக்கிய தெரி திரைப்படத்தில் இறுதி காட்சியில் விஜய் சினியுலகிற்கு தன் மகளை அறிமுகப்படுத்தினார்.

    2

    நடிகர் ஜெயம் ரவியின் தந்தையும் இயக்குனர் தான். இவர் தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமா முக்கிய நடிகர்களில் ஒருவராக பிரபலமாகியுள்ளார். இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கிய 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடித்தார். அப்படத்தில் இவர் தனது மகனை குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

    3

    எந்த ஒரு திரையுலக பின்னணி இல்லாமல் தனது நடிப்பின் நேர்தியால் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக புகழ் பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி, அந்த படத்தில் நாயகனின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனது மகனை நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். பின் விஜய் சேதுபதி 'சிந்துபாத்' படத்தில் தனது மகனுடன் முழு நேர படத்தில் நடித்தார். 2021ல் நடிகர் விஜய் சேதுபதி 'முகிழ்' திரைப்படத்தில் தன் மகளை தன்னுடன் நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

    4

    நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகர் அருண் விஜய் 'ஓ மை டாக்' திரைப்படத்தில் தனது மகன் உடன் நடித்து அசத்தியுள்ளார். இப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகர் அருண் விஜய்யும் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான்.

    5

    சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பிற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார். இவர் தன் மகன் துருவ் விக்ரமை தமிழ் சினிமாவில் வர்மா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் 'மகான்' படத்தில் தன்னுடன் நடிக்க வைத்துள்ளார். மகான் படம் நேரடி ஓடிடி படமாகும்.

    6

    சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர், பாக்யராஜ். இவர் தன் மகன் ஷாந்தனுவை சிறுவயதில் இருந்து பல படங்களில் தன்னுடன் நடிக்க வைத்துள்ளார். சமீபத்தில் கூட 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் மகன் உடன் நடித்திருந்தார்.

    7

    சத்யராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பணியாற்றி பிரபலமானவர், தற்போது இவர் பல படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ் தன் சிபி ராஜை தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து வந்துள்ளார். வெற்றிவேல் வீரவேல், ஸ்டுடென்ட் நம்பர் 01, கோவை ப்ரதர்ஸ் என பல படங்களில் இவருவம் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

    8

    சிவாஜி கனெக்ஷன் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபு, தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது துணை கதாபாத்திரம் மற்றும் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நடித்து அறிமுகமானார். இருவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

    9

    டி ராஜேந்தர், தமிழ் சினிமாவில் இயக்குனர், வசன ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன் முகம் கொண்டு தமிழ் சினிமாவில் பணியாற்றி மக்களால் கொண்டாடப்பட்டவர். இவர் தனது மகன் சிலம்பரசனை தான் இயக்கி நடிக்கும் படங்களில் உள்ள குழந்தை நட்சத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து, தமிழ் சினிமாவில் தன் மகனை பிரபலமாக்கினார். தற்போது சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி முன்னணி நடிகராக .அவதரித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X