X
முகப்பு சினி தரவரிசை

டான் முதல் எம் மகன் வரை... தமிழ் படங்களின் வில்லங்கமான தந்தை கதாபாத்திரங்கள்

Author Sakthi Harinath | Updated: Sunday, June 16, 2024, 04:51 PM [IST]

தமிழ் திரைப்படங்களில் பிரபலமான வில்லங்கமான தந்தை கதாபாத்திரங்கள் பற்றிய பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் பிரகாஷ் ராஜ் நடித்த பாவ கதைகள் & விருமன், நாசர் நடித்துள்ள எம் மகன் போன்ற படங்கள் உள்ளது. வில்லங்கமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்ட நடிகர்கள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் இதோ.


cover image
எம் மகன்
1

2006ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத், நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம். 'கடுமையான தந்தை அவரிடம் மாட்டி தவிக்கும் மகன்' இதுவே இப்படத்தின் கதைக்கரு. மிகவும் மோசமான சூழலில் இருந்து ஒரு நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ள தந்தை, தான் பட்ட கஷ்டங்கள் மகனுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பல வழிகளில் அவரை துன்புறுத்துகிறார். அப்பாவின் கண்டிப்பில் இருந்து மகன் எப்படி வெளியேறினார், பின் மகனுக்கும் அப்பாவிற்கும் இடையேயான உறவு என்ன ஆனது என்பதே இப்படம்.

டான்
2

சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, பிரியங்கா என பலர் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், டான். இப்படத்தில் இரண்டு தந்தை கதாபாத்திரங்களை காண்பித்துள்ளார், இயக்குனர். நாயகியின் தந்தை மிகவும் மகளுடன் நண்பராக பழகுகிறார். ஆனால் நாயகனின் தந்தை சமுத்திரக்கனி மிகவும் கண்டிப்போடு வளர்க்கிறார். கல்லுக்குள் ஈரம் என கண்டிப்பான தந்தைகளுக்குள் உள்ள பாசத்தை பற்றி இப்படம் பேசியுள்ளது. மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்ட சமுத்திரக்கனியின் தந்தை கதாபாத்திரம் இறுதியில் அவரின் நல்ல குணங்களை பற்றி பேசி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

மிஸ்டர் பாரத்
3

ரஜினிகாந்த் - சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம். ஒரு பெண்ணை ஏமாற்றி உதறிவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்ளும் சத்யராஜ், சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபராக வாழ்கிறார். சத்யராஜ் ஏமாற்றிய பெண்ணிற்கு பிறக்கும் நாயகன் ரஜனிகாந்த், தன் தாயிக்கு நீதி கிடைக்க போராடுவதே இப்படத்தின் கதை. இப்படம் முழுவதுமே எலியும் பூனையாக மகன் - தந்தை கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியில் மகனை கொள்ள நினைக்கும் தந்தை, தான் செய்த தவறுகளை திருத்தி தனது மகனை காப்பாற்றுகிறார். இருப்பினும் இப்பபடத்தில் இப்படத்தில் உள்ள தந்தையின் வில்லத்தனமும், மகனின் சாதுரியம் இப்படத்தின் கதாபாத்திரங்களை உயர்த்தி பேச வைத்துள்ளது.

பாவ கதைகள்
4

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி செயலியில் ஒரு ஆந்தாலஜி படைப்பாக வெளியான திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தான் பாசமோடு தூக்கி வளர்த்த பெண் வெற்றி ஜாதியில் உள்ள நபரை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். தன் மகளின் இந்த செயலுக்கு நல் வார்த்தைகளை பேசி மகளை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவரை ஆணவ கொலை செய்கிறார், பிரகாஷ் ராஜ். இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானது.

விருமன்
5

விருமன் - கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் கார்த்தியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ் நடித்துள்ள கதாபாத்திரம் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு பிரபலமாகியுள்ளது. வில்லத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் விருமன் படத்திற்கு தனது பங்களிப்பை பெரிய அளவில் கொடுத்துள்ளார், பிரகாஷ் ராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+