சினி தரவரிசை
குக் வித் கோமாளி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபலமான ரியாலிட்டி தொடர். இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் ரசிகர்கள் ஆதரவு இருக்கின்றது. கடந்த சீசன், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. பல எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சர்ச்சைகள் அந்த சீசனைப் பாதித்தன. இருப்பினும், முந்தைய நான்கு சீசன்களிலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் உறுதியான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சிக்கு புதுமை சேர்க்கும் வகையில், இந்த சீசனில் ஒரு புதிய ஜட்ஜை குக் வித் கோமாளி டீம் அறிமுகம் செய்துள்ளது.