ஐஸ்வர்யா தட்டா பயோடேட்டா

  ஐஸ்வர்யா தட்டா சில இசை ஆல்பம் மற்றும் ஒரு சில காட்சிகளில் தோன்றி திரையில் அறிமுகமான இவர், தமிழில் நாயகியாக நடித்தும், பிரபல தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமாகியுள்ளார்.

  திரைப்பயணம்

  ஐஸ்வர்யா தட்டா ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பல மேடைகளில் ஆடியுள்ளார். இதனை தொடர்ந்து மாடலிங் துறையில் பங்குபெற்றுள்ள இவர், சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.

  இவர் சோனி மியூசிக் ஆல்பம்-ல் பின்னணி பாடகராகவும், வீடியோவில் நடித்தும் பணியாற்றி ஹிந்தி திரையில் அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் வெள்ளித்திரை அனுபவமாக 2014 ம் ஆண்டு சலோ பிக்நிக் மனையின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

  பின்னர் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றுள்ளார்.

  ஐஸ்வர்யா தட்டாவின் புகைப்படங்கள் மற்றும் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் பற்றி அறியவும்

  பிரபலம்

  ஐஸ்வர்யா தட்டா 2014ம் ஆண்டு தமிழில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நாயகன் நகுலிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர். பின்னர் பாயும் புலி, ஆறாது சினம் என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகையாக பிரபலமாகியுள்ளார்.

  இவர் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மூலம் இவர் தமிழ் திரையில் பிரபலமானார்.