ஐஸ்வர்யா ராஜேஷ் பயோடேட்டா

    ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

    ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார்.

    இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார். மற்றும் வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிகின்றார்.