twitter
    Celebs»Ambika»Biography

    அம்பிகா பயோடேட்டா

    அம்பிகா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் 1978 முதல் 1989 வரையிலுள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகை ஆவார்.

    இவர் 1962-ம் ஆண்டு குஞ்சன் நாயர் மற்றும் சரஷ்சம்மா என்பவர்களுக்கு மகளாக கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். இவரது தாய் 2014-ம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். மேலும் அம்பிகாவிற்கு ராதா மற்றும் மல்லிகா என்ற இரு சகோதிரிகளும், அர்ஜுன் சுரேஷ் என்ற இரு சகோதர்களும் உள்ளனர். இவர் 1988-ம் ஆண்டு சின்னு ஜான் என்பவரை திருமணம் புரிந்து இரு மகன்களுடன் அமெரிக்காவில் வாழ்துவந்துள்ளார். பின்னர் 1997-ம் ஆண்டு விவாகரத்து பெற்று இந்திய திரும்பிய இவர், 2000-ம் ஆண்டில் ரவிகாந்த் என்னும் நடிகர் ஒருவரை மறுமணம் புரிந்து இவர் 2002-ம் ஆண்டு இவருடனும் விவாகரத்து பெற்று தற்போது சென்னையில் இவரது மகன்களுடன் வாழ்துவருகிறார்.

    இவர் 1979-ம் ஆண்டு சக்களத்தி திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் 1997-ம் ஆண்ட முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

    இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நா.1, ஜீ தொலைக்காட்சியில் ஜீ டான்ஸ் லீக், டான்சிங் கில்லாட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றிவருகிறார்.