X
அனிருத் ரவிச்சந்தர்
Music Director/Singer/Actor

அனிருத் ரவிச்சந்தர் பயோடேட்டா

அனிருத் ரவிச்சந்திரன், இந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார்.

பிறப்பு / திரையுலக அறிமுகம்

அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார்.  லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்-யின் உறவினர் மகன்.  

அனிருத் ஜினகஷ் என்ற இசைக்குழு பள்ளியில் பயின்றார். அவரது 21-ம் வயதில் '3' படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார். இது மிக பெரிய வெற்றியை ஈட்டியது. 3 திரைப்படத்திற்காக 'ஒய் திஸ் கொலவெறி டி' என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர். 

திரைப்பயணம்

2012-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் நடிகர் ரஜினி-யின் மகள், நடிகர் தனுஷ்-ன் மனைவியான ஐஸ்வர்யா ரஜினி-யின் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இவர் இசையில் உருவான வொய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகியுள்ளார்.

3 படத்தினை தொடர்ந்து இவர் இசையில் வெளியான டேவிட் திரைப்படத்தின் கனவே கனவே பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. இதனை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் பாடல்களும் பின்னை இசையும் பிரபலமாகி இவரை தமிழ் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக மாற்றியுள்ளது.

பிரபலம் / அங்கீகாரம்

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையின் மூலம் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+