X
அஞ்சலி அமீர்
Actor

அஞ்சலி அமீர் பயோடேட்டா

அஞ்சலி அமீர் (இயற்பெயர்: ஜம்ஷீர்) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு மம்முட்டி நடித்து வெளியான பேரன்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர் திரையுலகில் கதாநாயகியாக நடித்த முதல் திருநங்கை ஆவார். 

இவர் மலையாள தொலைக்காட்சில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீஷன் 1 தொடரில் பங்குபெற்றுள்ளார்.

1995-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் தமராசசேரி கிராமத்தில் இஸ்லாமிய குடுப்பதில் பிறந்துள்ளார். இவரின் தாயார் இவர் 8 மாத கைக்குழந்தையாக இருக்கையில் விபத்தில் இறந்துவிட பின்பு தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார்.

ஒருகட்டத்தில் தான் திருநங்கை என தெரியவர வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வரும் ரயில் ஒன்றில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் பல கஷ்டங்களை தாண்டி, தமிழக அரசின் டிரான்ஸ்பர்சன் சிகிச்சை பெற்று, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பினை மீண்டும் தொடங்கியுள்ளார். 

தனது கல்வி பயிற்சி முடிந்ததும் பெண்கள் அழகு நிலையம், பார் டான்சர் என பல வேளைகளில் ஈடுபட்டுள்ளார். 

பின்பு 22 வயதில் இவருக்கு மாடலிங்காண வாய்ப்பு கிட்டியதும் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு-ல் தனது மாடலிங் பணியை தொடங்கியுள்ளார். பின்பு மம்முட்டி நடிக்கும் பேரன்பு படத்தின் கதாநாயகிக்கான வாய்ப்பு கிட்டியதும்  திரையுலகில் கதாநாயகியாக நடித்த முதல் திருநங்கை என புகழ் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+