X
முகப்பு » பிரபலங்கள் » ராகுல் போஸ்
ராகுல் போஸ்

ராகுல் போஸ்

Actor
பயோடேட்டா:  ராகுல் போஸ் ஒரு இந்திய நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், சமூக ஆர்வலர் மற்றும் ரக்பி குழு வீரரவார். போஸ் ப்யார் கே சைடு எஃபெக்ட்ஸ் மற்றும் ஜங்கார் பீட்ஸ் போன்ற சில ஹிந்தி திரைப்படங்களில் தோன்றினார். டைம் ஆசியா இதழ், ஒத்த சம்பவங்கள் கொண்ட திரைப்படங்களான இங்லீஷ், ஆகஸ்ட் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர் போன்ற திரைப்படங்களில், இவரது சிறப்பான பணியினைக் கண்டு "இந்திய சினிமா கலைக்குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்" என்று அழைத்தது. இவர் தனது சமூக சேவையின் மூலமும் அறியப்படுகிறார்.  2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு துயர் துடைக்கும் முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டார் மற்றும் பாரபட்சம் காட்டும் செயலுக்கு எதிராக ஒரு அரசாங்கமல்லாத குழுமத்தை(என்.ஜி.ஒ) தோற்றுவித்தார். மேலும் போஸ் ஒரு முன்னாள் இந்திய சர்வதேச ரக்பி அணியின் உறுப்பினர், தேசிய இந்திய ஆரஞ்சு ரக்பி அணி உறுப்பினர். ராகுல் போஸ் ரூபென் மற்றும் குமுத் போஸ் ஆகிய இருவருக்கும் ஜூலை 27, 1967 ஆம் ஆண்டு ஹிந்து, கயஸ்த் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னைப் பற்றி கூறும் போது "பாதி வங்காளி நான்கில் ஒரு பங்கு பஞ்சாபி மற்றும் நான்கில் ஒரு பங்கு மகாராஷ்ட்ரியன்" என்று கூறுவார். இவர் தனது குழந்தை பருவத்தை மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் கழித்தார். பிறகு குடும்பத்துடன் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். இவரின் முதல் நடிப்பு கதாபாத்திரம் இவரின் ஆறாவது வயதில் பள்ளியில் டாம், பைபரின் மகன் என்ற நாடகத்தின் மூலம் அரங்கேறியது. இவருடைய தாய் குத்துச் சண்டை மற்றும் ரக்பி குழுவை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதன் காரணமாக குழந்தைப் பருவத்தில் விளையாட்டின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் இவர் கிரிக்கெட்டும் விளையாடினார் மற்றும் இவருக்கு கிரிக்கெட் வீரரான மன்சூர் அலி கான் பட்டோடி பயிற்சி அளித்தார். இவர் மும்பை, கதீட்ரல் மற்றும் ஜான் கன்னோன் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். பல அமெரிக்க பல்கலைக் கழகங்கள் இவரை நிராகரித்தபோது, போஸ் சிதேன்ஹம் கல்லூரியில் சேர்ந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது பள்ளி ரக்பி அணியில் விளையாடினார், வெஸ்டர்ன் இந்தியா சாம்பியன்ஸ் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். 1987 ஆம் வருடம் இவரது தாயின் மரணத்திற்குப் பிறகு, போஸ் ரெடிபியுஷினில் நகல் எழுத்தராக பணியாற்ற தொடங்கினார். இவரது இங்லீஷ், ஆகஸ்ட் என்ற முதல் பட வெளியீட்டுக்கு பிறகு முழு நேர நடிகராக மாற விளம்பர ஆக்க இயக்குனர் வேலையை துறந்தார். போஸ் பாம்பே மேடையில் ராகுல் டி'சுனா'ஸின் டோப்ஸி டர்வி மற்றும் ஆர் தேர் டைகர்ஸ் இன் தி காங்கோ ஆகிய நாடகங்களில் நடித்துத் தன்னுடைய நடிப்புத் தொழிலை ஆரம்பித்தார். டி'சுனா'ஸின் அத்தை இயக்குனர் தேவ் பெனகலின் திரைப்படங்களான இங்லீஷ், ஆகஸ்ட் ஆகியவற்றில் பணிபுரிந்த நாடக குழு இயக்குனர் போஸை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார். போஸுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்த பிறகு பெனகல் அகஸ்திய சென் என்ற வேலைக்கார வேடம் தர முடிவு செய்தார். உபமன்யு சட்டர்ஜியின், அதே பெயரில் உள்ள நாவலின் அடிப்படையில் இங்லீஷ், ஆகஸ்ட் என்ற முதல் ஹிங்லீஸ் படம் போஸுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. ஏனெனில் 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் வாங்கிய முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இங்லீஷ், ஆகஸ்ட் படத்திற்கு பிறகு போஸ் தமக்கு தொலைக்காட்சியில் வேலை இருப்பதைக் கண்டார். போஸுக்கு இந்தியாவின் முதல் ஆங்கில மொழி தொலைக்காட்சித் தொடரான எ மௌத்புல் ஆப் ஸ்கையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிபிசி நிறுவனத்தின் ஸ்டைலை இணைந்து வழங்கினார். லைலா ரௌஅஸ்சுடன் இணைந்து. 1998 இல் கைசாத் கஸ்தாத் அவர்களின் பாம்பே பாய்ஸ் என்ற படத்தில் நசிருதீன் ஷாவுடன் நடித்தார். அதன் பிறகு தேவ் பெனகலின் இரண்டாவது படமான ஸ்ப்ளிட் வைடு ஓபன் என்ற படத்திலும் தோன்றினார். சுற்றித் திரியும் விற்பனையாளர் வேடத்திருக்கு தன்னை தயார் செய்யும் பொருட்டு போஸ் மும்பையின் குடிசைப்பகுதிக்கு சென்று மருந்துகள் விற்பவரை இரண்டு வார காலத்திற்கு கூர்ந்து கவனித்தார். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தான் இவரை அவருக்குள் இருந்த சமூக குற்ற உணர்வை தட்டி எழுப்ப காரணமாயிற்று. இவர், இதை பின்னாளில் கண்டு கொண்டார். பாலியல் குறித்து வழங்கியதால் ஸ்ப்ளிட் வைடு ஓபன் என்ற படம் இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியது, எனினும் இவரின் நடிப்பிற்காக 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான வெள்ளித் திரை விருதைப் பெற்றார். இவர் இங்கிலாந்தில் லீஸ்செஸ்டெர் ஹய்மார்கட் என்ற வெளிநாட்டு படத்திலும் நடித்துள்ளார். இங்குதான் டிம் முராரியின் தி ஸ்கொயர் சர்க்கிள் என்ற கதையின் ஆங்கில பதிப்பில் நடித்தார். 1997 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் நாவலான நடு இரவின் குழந்தைகள் (midnight's Children) என்ற படத்தை பிபிசி நிறுவனம் தயாரித்தது. போஸ் இதில் சலீம் சினை என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் இத்திரைப்படத்தை திரையிட மறுத்ததால் இந்த பட வேலைகள் அனைத்தும் முடங்கியது. போஸை இங்லீஷ், ஆகஸ்ட் ஆகிய திரைப்படங்களில் பார்த்த இயக்குனர் கோவிந்த் நிஹலனி தன்னுடைய படமான தக்ஷகி ல் அஜய் தேவ்கனுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தை வழங்கினார். இந்த படம் வணிக ரீதியில் வெற்றிபெறவில்லை எனினும் போஸ் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டு எவரிபடி சேய்ஸ் ஐயம் ஃபைன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ரீஹன் என்ஜினியர் மற்றும் கோயல் பூரி ஆகியோருடன் துணை கதாபாத்திரத்தில் போஸ் நடித்த எவ்ரிபடி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்திற்காக பாம் ஸ்ப்ரிங்க்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் விருதான ஜான் ஸ்கேல்சிங்கேர் விருதை போஸ் பெற்றார். 2002 ஆம் ஆண்டில் அபர்ணா சென்னின் கலைப் படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர் என்ற படத்தில் கொங்கனா சென் சர்மாவுடன் நடித்தார். இந்த படம் சமூக வன்முறைகளை விவரிக்கும் படமாகும். இது ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. அதுமட்டுமல்லாது மூன்று தேசிய சினிமா விருதுகளையும் வென்றது. 2003 ஆம் ஆண்டில் போஸ் ஜங்கார் பீட்ஸ் என்ற சினிமா மூலம் நடைமுறை பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். இதில் இரண்டு நண்பர்களில் ஒருவராக நடித்தார். இசை போட்டியில் வென்றதன் மூலம் ஆர்.டி.பர்மன் ரசிகர்கள் மனதில் முழுவதுமாக இடம் பிடித்தார். வெற்றிகரமான இசையமைப்பின் மூலம் பெரிதும் பாராட்டப்பட்ட ஜங்கார் பீட்ஸ் திரைப்படம் நகர்ப்புற பல்படிகளில் ஒரு எதிர்பாராத வெற்றியை ஈட்டியது. இது இசைக்காக பல விருதுகளை வென்றது. அதே வருடத்தில் போஸ் மற்றொரு பாலிவுட் படமான மும்பை மேட்னீ யில் நடித்தார். இந்த படம் யுகே யில் ரிலீசானது. இவர் கரீனா கபூருடன் சமேலி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெறவில்லை, ஆனாலும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றது. கொங்கன சென் சர்மாவுடன் இணைத்த இரண்டாவது படமான 15 பார்க் அவென்யு என்ற படம் ஜனவரி 2006 ஆம் ஆண்டில் வெளியானது. அபர்ணா சென் இயக்கிய இந்த படம் ஆங்கிலத்தில் திரையானது. 15 பார்க் அவென்யு படம் பல்வேறு சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையானது. இந்தியாவில் வெளியிடுவதற்கு ஹிந்தியில் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தனது அடுத்த முயற்சியாக காதல் கலந்த நகைச்சுவைப் படமான ப்யார் கே சைடு எஃபெக்ட்ஸ் மூலம் போஸ் மீண்டும் நடைமுறை பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். இந்த படத்தின் தொடர்ச்சியாக போசின் அடுத்த படைப்பு மும்பையைச் சார்ந்த டிஜே சித் மற்றும் அவரின் பஞ்சாபி தோழி உடனான உறவை உறுதிசெய்யாததைக் கருவாகக் கொண்டது, மேலும் த்ரிஷா என்ற பாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்தார். பொதுவாக இந்திய சினிமாவில் அறியாப்படாத பயன்படுத்தாத யுக்தியை, போஸ் நான்காம் சுவரை உடைக்கும் படியான புதிய திரைக்கதையை சொல்லிய விதம் பல விமர்சனங்களை பெற்றுத்தந்தது. இந்த படம் பல்படிகளில் நல்ல வரவேற்பையும், வணிக ரீதியில் சுமாரான வெற்றியையும் ஈட்டியது. மேலும் 2006 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதன்மையான இடத்தை பெற்றது. போஸ் மற்றும் ஷெராவத் ஆகிய இருவரும் அவர்களுடைய நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களை பெற்றனர். இந்த பட வெற்றியின் தொடர்ச்சியாக ஷாதி கே சைடு எஃபெக்ட்ஸ் என்ற படம் 2010 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. ஷெராவத் மற்றும் போஸ் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றொரு பாலிவுட் காமெடி படமான மான் கே முகல் -இ- அசாம் -ல் நடித்தனர். இப்படம் சிக்கலான விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் தோல்விப் படமாகவும் அமைந்தது. போஸ் 2006 ஆம் ஆண்டில் முதன் முதலில் மூவர் இணைந்து பாடும் இசைக்கூறு கொண்ட அநிருத்த ராய் சௌத்ரியின் அனுரணன் என்ற வங்காளி படத்தில் நடித்தார். அனுரணன் திரைப்படம் தொடர் விழாக்காலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வங்காளத்தில் மூன்று மாதங்கள் வெற்றிகரமாக ஓடியது. பிறகு இது ஹிந்தியில் மொழி மாற்றம் அடைந்து நாடு முழுவதும் வெளியானது. போஸின் இரண்டாவது வங்காளி படமான கால்புருஷ் வணிகரீதியாக ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த கால்புருஷ் திரைப்படம் தந்தை-மகன் உறவைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இப்படத்தை எழுதி இயக்கிய புத்ததேவ் தாஸ்குப்தாவிற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. 2009 ஆம் ஆண்டில் போஸ், அந்தஹீன் என்ற படத்திற்காக சௌத்ரியுடன் மீண்டும் சேர்ந்தார். இந்த படம் இணையத்துடனான தொடர்பைப்பற்றி விவரிக்கிறது. அனுரணன் போன்று அந்தஹீனும் வணிக ரீதியில் மேற்கு வங்காளத்தில் வெளியானது. மகிந்திரா இந்தோ-அமெரிக்க கலைக்குழு பட விழா (MIACC) மற்றும் இந்திய சர்வதேச பட விழா (IFFI) உட்பட பல திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் திரையானது. போஸ் 2008 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி படமான பிஃபோர் தி ரெயின்ஸ் உட்பட பொதுவான மற்றும் கலைப்படம் ஆகிய இரண்டும் கலந்த படங்களில் தொடர்ந்து நடித்தார். பிபோர் தி ரெயின்ஸ் திரைப்படம் யு.எஸ் மற்றும் யு.கே வில் வெளியானது. இதில் போசின் நடிப்பைப் பலரும் பாராட்டினர். எனினும் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் போஸ், ராணுவ நீதிமன்ற நாடகம் இடம்பெறும் எ பியு குட் மென் என்ற அமெரிக்க திரைப்படத்தில் ஷௌர்யா என்ற கதாப்பாத்திரம் ஏற்று நடித்தார்.  போசின் நடிப்பை பலரும் பாராட்டினர். விமர்சகர் தரன் ஆதர்ஷ், "இவரின் நடிப்பு அவருடைய மிகச் சிறந்த நடிப்புகளில் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது' என்று கூறினார்.[32] தில் கபடி என்ற படத்திற்காக கொங்கனா சென் ஷர்மாவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்தார். இதில் திருமண சிரமங்களை எதிர் கொள்ளும் கணவன் மனைவி வேடங்களை ஏற்று நடித்திருந்தனர். இவர், 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மொஹ்சின் ஹமிடின், மோத் ஸ்மோக் என்ற நாவலை தழுவி திரைப்படமெடுக்க திட்டமிட்டார். ஆனால் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக இந்த திட்டத்தைத் தள்ளி வைத்தார். இவர் நடித்துள்ள அபர்ணா சென்னின் மூன்றாவது படமான ஜப்பானிய மனைவி என்ற படம் ஏப்ரல் 6 2010-ஆம் ஆண்டில் வெளியானது. போஸ் அடுத்து, திகில் படமான ஃபையர்ட் உட்பட மும்பை சகாசக், ஐ ஆம் மற்றும் குச் லவ் ஜைஸா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் அவர் தீபா மேத்தா வின் நடு இரவின் குழந்தைகள் (மிட் நைட் சில்ட்ரென்) என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார். ராகுல் போஸ், முன்னதாக தான் இயக்கிய எவ்ரிபடி சேஸ் ஐ அம் ஃபைன் என்ற படத்தில் நடித்த கோயல் பூரியுடன் இணைத்திருந்தார். மேலும், ஏற்கனவே இந்த ஜோடி 2004 ஆம் ஆண்டில் வெளியான ஒயிட் நாய்ஸ் என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் படிக்க

ராகுல் போஸ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஐ அஹ்மத் 28 Sep 2023
கமல் ஹாசன் 10 Aug 2018
கமல் ஹாசன் 25 Jan 2013

ராகுல் போஸ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ராகுல் போஸ்

பெயர் ராகுல் போஸ்
பிறந்த தேதி 27 Jul 1967
வயது 58
பிறந்த இடம் மும்பை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ராகுல் போஸ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ராகுல் போஸ் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+