X
தமிழ் » திரைப்படங்கள் » விஸ்வரூபம் 2
விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

Action | Thriller | 10 Aug 2018 | 165 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

விஸ்வரூபம் 2 கதை

விஸ்வரூபம் 2 2015ல் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். 2013ல் விசுவரூபம் என்ற பெயரில் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார். கதை :  படம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வருகின்றன. முதல்பாதியில் கமல் எப்படி தீவிரவாதிகள் குருப்பில் இணைந்தார் என்பது தெளிவாக இருக்காது. படம் தொடங்கியதுமே கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா அனைவரும் லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். அப்போது கமல் முன்பு நடந்ததை நினைத்து பார்க்கிறார். ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல். அப்போது அவருடன் காதல் செய்கிறார். அவருடன் தனியறைக்கு போவதுபோல நடிக்க இதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். இதனையடுத்து அங்கிருந்து தப்புவதுபோல ஆப்கானிஸ்தானுக்கு தேடப்படும் குற்றவாளியாக செல்கிறார். அதன்பின் அங்கு வில்லன் உமருடன் அவர் செய்வதை முதல்பாகத்திலேயே பார்த்திருப்போம். பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதிகதை.
Read More

விஸ்வரூபம் 2 நடிகர்கள் & படக்குழுவினர்

விஸ்வரூபம் 2 அணியின் தகவல்

இயக்குனர் கமல் ஹாசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விஸ்வரூபம் 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
விஸ்வரூபமும் 2வின் முதல் பாகம் லண்டனில் பயணிக்கிறது. ஹிட்லர் காலத்து கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சுனாமியை உருவாக்கி லண்டனை அழிக்க திட்டமிடும் தீவிரவாதிகளின் சதியை கமல் முறியடிக்கிறாரா என்பது தான் கதைக்களம். இப்படத்திலும் ஒமரும், சலீமும் தங்களது திட்டங்களைத் தொடர்கின்றனர். கமலைக் கொல்லத் துரத்துகின்றனர். ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன, ஏவுகணைகள் வீசுகின்றனர், அடிதடி, கொலை என பெரும்பாலான காட்சிகளில் ரத்தவாடை. விஸ்வரூபம் முதல் பாகத்தில் ஸ்லோவாக நகரும் படத்தை, ஒரு சண்டைக்காட்சி மூலம் விறுவிறுப்பாக்கி இருப்பார் கமல். அதேபோன்று இப்படத்திலும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான். உளவாளி படம் என்றால் எவ்வளவு விறுவிறுப்பாக படம் நகர வேண்டும். ஆனால், இப்படத்தில் அது மிஸ்ஸாவது மிகப்பெரிய மைனஸ். இப்படத்தில் குறுகிய நேரத்தில் நிறைய விசயங்களைச் சொல்ல முற்பட்டு கமல் தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இங்கிலாந்தில் இல்லாத ஆபிசர்களா? டர்ட்டி பாமை ஒளிப்பதற்காக இந்தியாவில் இருந்து லண்டன் சென்று போராடும் உளவுத்துறை அதிகாரிகள் கதாபாத்திரம் மிகையாக இருக்கிறது. அதுவும் கப்பலைத் தேடி பூஜாவுடன், கமலே நேரடியாகச் செல்லும் காட்சிகள்.. நோ கமெண்ட்ஸ்.

விஸ்வரூபம் 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

விஸ்வரூபம் 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+