twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் 2.. சென்சார் போர்டில் ‘கட், மியூட்’ செய்யப்பட்ட 22 காட்சிகள் இவை தான்!

    விஸ்வரூபம் 2 படத்தில் நீக்கப்பட்ட வசனங்கள், வார்த்தைகள் இவை தான்.

    |

    சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் வசனங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் நாளை ரிலீசாக இருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரிலீசான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

    கட், மியூட்..

    இந்நிலையில், இப்படத்தில் இருந்து சென்சார் போர்டில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றிய விபரங்கள் என வாட்ஸ் அப்பில் ஒரு படம் வைரலாகியுள்ளது. அதன்படி மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

    சர்ச்சை வார்த்தைகள்:

    சர்ச்சை வார்த்தைகள்:

    அதன்படி, ஐஎப்எஸ், பாஸ்டர்ட், பாகிஸ்தான், சவுத் பிளாக், மாதர்சோத், பாரத் மாதா, அல்லாஹ், உங்க வழக்கப்படி போன்ற வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சில வன்முறைக் காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

    சப் டைட்டில்:

    சப் டைட்டில்:

    தேவைப்பட்ட இடங்களில் அராபிக் மொழியில் பேசப்பட்ட வசனங்களுக்கு தமிழில் சப் டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பர்தாவைக் கிழிப்பது போன்ற காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. "நீங்க ஜிகாத்தியோட தங்கி... திரும்பி வந்திருக்கீங்க" என்ற வசனத்தை முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

    படுக்கையறைக் காட்சிகள்:

    படுக்கையறைக் காட்சிகள்:

    பாத்ரூமில் நிருபமா உடைகளைக் களைவது போன்ற காட்சியில் 40 சதவீதமாக காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாசமாக இருப்பதாக படுக்கையறைக் காட்சிகளும் 50 சதவீதம் வரை நீளம் குறைக்கப்பட்டும், மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளன.

    English summary
    The Censor board have given 22 cuts and mutes to Kamal's Vishwaroopam 2 movie, says a Whatsapp forward message.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X