விஸ்வரூபம் 2 2015ல் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். 2013ல் விசுவரூபம் என்ற பெயரில் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார்.
கதை :
படம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வருகின்றன.
முதல்பாதியில் கமல் எப்படி தீவிரவாதிகள் குருப்பில் இணைந்தார் என்பது தெளிவாக இருக்காது.
படம் தொடங்கியதுமே கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா அனைவரும் லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். அப்போது கமல் முன்பு நடந்ததை நினைத்து பார்க்கிறார். ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல். அப்போது அவருடன் காதல் செய்கிறார். அவருடன் தனியறைக்கு போவதுபோல நடிக்க இதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்புவதுபோல ஆப்கானிஸ்தானுக்கு தேடப்படும் குற்றவாளியாக செல்கிறார். அதன்பின் அங்கு வில்லன் உமருடன் அவர் செய்வதை முதல்பாகத்திலேயே பார்த்திருப்போம்.
பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதிகதை.