»   »  பேய் படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்த நிஜ பேய்: அதிர்ந்த ஹீரோயின், இயக்குனர்

பேய் படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்த நிஜ பேய்: அதிர்ந்த ஹீரோயின், இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1 ஏஎம் பேய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பேயை பார்த்து இயக்குனரும், ஹீரோயினும் அதிர்ந்துள்ளனர்.

ஜித்தன் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் இயக்கியுள்ள பேய் படம் 1 ஏஎம். அந்த படத்தில் புதுமுகங்களான மோகன் மற்றும் சஸ்வதா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

தனது அக்காவை சீரழித்து கொலை செய்தவரை பேயின் உதவியுடன் ஹீரோ பழிவாங்குவது கதையாம். படம் குறித்து ராகுல் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

என் பட ஹீரோ மோகன் விஸ்காம் படித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் கார்த்திக் ஆகியோரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சவால்

சவால்

இளம் திறமைசாலிகளுடன் பணியாற்றுவது சவாலான விஷயம். என் படத்தில் பாடல்கள், காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் எல்லாம் இல்லை. என் படம் சீரியஸாக போகும்.

பங்களா

பங்களா

ஈசிஆரில் கடற்கரை அருகே உள்ள பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பங்களாவுக்கு எதிரே இருக்கும் வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்போது எங்களுக்கு தெரியாது.

ஹீரோயின்

ஹீரோயின்

ஹீரோயின் பங்களா மாடியில் இருந்து குதித்து சாகும் காட்சியை படமாக்கினோம். மாடிக்கு சென்ற ஹீரோயின் இரண்டு தூண்களுக்கு இடையே பெண் போன்ற உருவம் நிற்பதை பார்த்து பயந்தார்.

English summary
1 AM director Rahul said that real ghost visited the sets of his upcoming horror movie while they were shooting near the beach on ECR.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil