X
இறைவன்

இறைவன்

Action | Horror | Thriller | 28 Sep 2023 | A | 154 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

இறைவன் கதை

இறைவன் இயக்குனர் அஹ்மத். ஐ  இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஸ்சன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்துள்ளார். இறைவன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படம் 2023 செப்டம்பர் 28ல் உலகமுழுவதும் வெளியாகிறது. இறைவன் திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் இறைவன் திரைப்படத்தின் பாடல், டீசர் & டிரைலர் வீடியோக்கள் இறைவன் திரைப்படத்தின் பாடல்கள் இறைவன் திரைப்படத்தின் கதை கதைக்கரு: சென்னையில் இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்து வரும் பிரம்மா என்ற வில்லனை காவலராக பணியாற்றும் ஜெயம் ரவி கண்டறிந்து பழி தீர்ப்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை  காவல் அதிகாரியான ஜெயம் ரவி (அர்ஜுன்) மற்றும் அவரது டீம் நண்பராக நரேன் (அண்ட்ரூ) நடித்துள்ளார். வில்லனான ராகுல் போஸ் (பிரம்மா) இளம் பெண்களை பிடித்து கொடூரமாக கொலை செய்கிறார். கொலை செய்வது மட்டுமின்றி போலீஸுக்கும் சவால் விடுகிறார். இந்த வழக்கு அர்ஜுன் ஜெயம் ரவியிடம் வந்த உடனே வில்லனை சில முயற்சிகளிலேயே பிடித்து விடுகிறார். ஆனால், அந்த ஆப்பரேஷனில் தனது உயிர் நண்பனான ஆண்ட்ரூவை இழந்து விட, அந்த வேதனையில் போலீஸ் வேலையே வேண்டாம் என விலகி விடுகிறார். சிறையில் இருந்து எஸ்கேப் ஆகும் பிரம்மா மீண்டும் சேட்டையை ஆரம்பிக்க, பிரம்மாவை போட்டுத் தள்ளும் அர்ஜுன் நிம்மதி பெருமூச்சு விடலாம் என நினைத்தால் மீண்டும் கொலைகள் அதே பாணியில் தொடர்கிறது. யாருடா அடுத்த பிரம்மா? அவரை ஜெயம் ரவி என்ன செய்தார்? என்பது தான் இந்த இறைவன் படத்தின் கதை. இறைவன் திரைப்படத்தின் தகவல்கள் மனிதன், என்றென்றும் புன்னகை படத்தினை இயக்கிய இயக்குனர் அஹ்மத் ஐ இறைவன் படத்தினை இயக்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட இப்படம் 2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளியானது. சில காரணங்களால் வெளியீட்டிற்கு தள்ளிச்சென்ற இப்படம் இறுதியாக 2023 செப்டம்பர் 28ல் திரைக்கு வெளியாகி உள்ளது. தனி ஒருவன் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் ஜெயம்ரவி - நயன்தாரா கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பகவதி பெருமாள், விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல் போஸ், சார்லீ, அழகம் பெருமாள் என பல தமிழ் திரையுலக முன்னணி பிரபலங்கள் இப்படத்தின் நடித்துள்ளனர். இறைவன் திரைப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 
Read More

இறைவன் நடிகர்கள் & படக்குழுவினர்

இறைவன் அணியின் தகவல்

இயக்குனர் ஐ அஹ்மத்
ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தம்
தொகுப்பாளர் ஜே வி மணிகண்ட பாலாஜி
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இறைவன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சென்னையில் இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்து வரும் பிரம்மா என்ற வில்லனை காவலராக பணியாற்றும் ஜெயம் ரவி கண்டறிந்து பழி தீர்ப்பதே இப்படத்தின் கதைக்கரு.

இறைவன் ட்ரெய்லர்

Video Thumbnail

இறைவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இறைவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+