X
முகப்பு » பிரபலங்கள் » நயன்தாரா
நயன்தாரா

நயன்தாரா

Actress/Actor/Producer
பயோடேட்டா:  நயன்தாரா , கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார். இவரின்  புகைப்படங்கள்  மற்றும் இவர் நடித்த நடித்துள்ள தமிழ்  திரைப்படங்கள்  பற்றிய அறிய பிறப்பு / திரையுலக அறிமுகம் நயன்தாரா, கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்துள்ள இவர், பிறப்பால் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் பிறந்திருந்தாலும் இவரது தந்தை இந்திய விமான படையில் பணியாற்றியதால் இவர், இவரின் பள்ளி படிப்பினை ஜாம்நகர், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் பயின்றுள்ளார். பின்னர் கேரளாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் தனது இளங்கலை படத்தினை வென்றுள்ளார். இவருக்கு லெனோ எனும் தமயன் உள்ளார், இவர் துபாயில் வாழ்ந்து வருகிறார். இவர் கல்லூரி பருவத்தில் மாடலிங் துறையில் அவ்வப்போது பொழுதுபோக்கிற்காக பணியாற்றி வந்துள்ளார்.  இவர் பணியாற்றிய மாடலிங் துறையின் மூலம் இவருக்கு பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்கப்-ன் அறிமுகம் கிடைத்து "மனஸ்ஸினைக்கற" திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பிரபலம் மலையாள திரையுலகில் நாயகியை அறிமுகமான இவர், இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த அறிமுக நடிகையென பலரால் கௌரவிற்கப்பட்டார். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பின்னர், இவர் திரைத்துறையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார், ஆனால் இவர் மீண்டும் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்று ' லேடி சூப்பர் ஸ்டார் ' என்னும் புனைப் பெயரோடு தென்னிந்திய சினிமாவில் முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்று நடித்து வருகிறார். அதிக சம்பளங்களில் நடிக்கும் நடிகையாக நயன்தாரா புகழ் பெற்றுள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதால் இவர் பெரிய அளவில் தன் வர்த்தகம் மற்றும் மார்க்கெட்-யை உயர்த்தி தன் திரைவாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளார். பெண்களை மையப்படுத்திய படமாக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நயன்தாராவின் படங்கள் மாயா  டோரா அறம்  கோலமாவு கோகிலா நயன்தாரா நடித்துள்ள சூப்பர் ஹிட் டாப் 5 தமிழ் படங்கள் பில்லா ராஜா ராணி தனி ஒருவன் இமைக்கா நொடிகள் விஸ்வாசம் திருமணம் நயன்தாரா 2022 - ஜூன் 09ல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன் (தமிழ் திரைப்பட இயக்குனர்) உடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள இவர்கள் 2022ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க

நயன்தாரா திரைப்படங்கள்

நயன்தாரா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நயன்தாரா

பெயர் நயன்தாரா
பிறந்த தேதி 18 Nov 1984
வயது 42
பிறந்த இடம் Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நயன்தாரா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நயன்தாரா பிரபலம்

நயன்தாரா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+