அணுபிரியா கோயென்க 2013-ம் ஆண்டு குறும் படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமான இவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நாயகியாகவும், துணை கதாபாத்திர நடிகையாகவும் நடித்து திரைத்துறையில் புகழ்பெற்றுள்ளார்.
திரையுலக தொடக்கம் / அனுபவம்
அணுபிரியா கோயென்க உத்தர பிரதேஷ் மாநிலத்தில் கான்பூர் நகரில் பிறந்துள்ளார். டெல்லி-யில் தனது கல்லூரி பட்டம் வென்றுள்ள இவர், திரைவாழ்க்கையில் ஆர்வம் கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
2013-ம் ஆண்டு "ஒர்த் தி கிஸ்" என்னும் குறும் படத்தில் நடித்துள்ள இவர், பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரண்டு திரைத்துறையில் தொடர்ந்து நடித்துவந்துள்ள இவர், தொலைக்காட்சி மற்றும் இணையத்தள தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இவர் தொலைக்காட்சிகளில் நடிப்பது மட்டுமில்லாமல் இணையத்தள தொடர்களான ஸ்கேர்ட் கேம்ஸ், கிரிமினல் ஜஸ்டிஸ் என பல இணையத்தள தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த ஹிந்தி திரைப்படமான வார் திரைப்படம், இந்தியாவில் பல மொழிகளில் வெளியானதை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகிலும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.