X
அறிவழகன்
Director/Story Writer/Screenplay Writer

அறிவழகன் பயோடேட்டா

அறிவழகன் வெங்கடாசலம் தமிழ்த் திரைப்பட இயக்குனர். கோயம்புத்தூரில் பிறந்த இவர் திருச்சியில் இளநிலை கணினி பட்டப்படிப்பினை முடித்துவிட்டு சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குதல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். திரைப்படக்கல்லூரியில் அவர் எழுதி இயக்கிய 'புதினம்' என்னும் குறும்படம் அவருக்கு தமிழக அரசு விருதினை பெற்று தந்தது.

புகழ்பெற்ற இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற படங்களில் பணியாற்றினார். தனது முதல் திரைப்படமாக 'ஈரம்' திரைப்படத்தை அவருடைய குருநாதர் ஷங்கர் அவர்களே 'S'பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்க பெரும் வெற்றி பெற்றது. 'ஈரம்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய திகில் திரைப்படமாக பதிவானது.

விஜய் தொலைக்காட்சியின் சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான விருதினை இயக்குனர் அறிவழகன் பெற்றார். ஆஸ்கார் பிலிம் ரவிசந்திரன் தயாரிப்பில் அடுத்த படமான 'வல்லினம்' துணிச்சலான கதையைக்கொண்டு வெளிவந்து அனைத்து தரப்பிலும் வெற்றி பெற்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+