பானு ஸ்ரீ பயோடேட்டா

    பானு ஸ்ரீ (பானு ஸ்ரீ ரெட்டி) என்று இயற்பெயர் கொண்டு அறியப்படும் இவர், இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்துள்ளார். இவர் தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி நாடகத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ஜெய் நடித்த பிரேக்கிங் நியூஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் 2018-ம் ஆண்டு தெலுங்கில் நடைபெற்ற பிக்பாஸ் சீஸ்ஸின்-2வில் பங்கேற்பாளராக பங்கேற்று பிரபலமாகியுள்ளார்.

    ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த இவர் பானு ஸ்ரீ, பானு ஸ்ரீ ரெட்டி, பானு திரிபாதி, பானு திரிபற்றி, ஸ்வப்னா என பல பெயர் கொண்டு அறியப்பட்டார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினை ஹைதராபாத்தில் கற்றறிந்தார்.

    இவர் தனது சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், ஜபிலம்மா என்னும் தெலுங்கு நாடகத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு இடதாரி மத்திய 18 என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.