X
பரத்வாஜ்
Music Director/Singer

பரத்வாஜ் பயோடேட்டா

பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார். இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார். இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர். பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குனர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+