X
பிந்து மாதவி
Actress/Singer

பிந்து மாதவி பயோடேட்டா

பிந்து மாதவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை மற்றும் திரையுலக வடிவழகி ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 2017-ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக தொடங்கி பிரபலமானா பிக் பாஸ் சீஸ்ஸின் 1-ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிறப்பு

இவர் ஆந்திர மாநிலத்தில் மடனப்பல என்னும் நகரத்தில் 1986-ம் ஆண்டு ஜூன் 14-ல் பிறந்துள்ளார். இவரின் தந்தை வணிக வரித்துறையின் துணை ஆணையாளராக பணியாற்றியதால், அவரது சிறுவயதில் திருப்பதி, விஜயவாடா, குண்டூர், நெல்லூர், ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்துவந்துள்ளார்.

பின்னர் தமிழகத்தில் சென்னையில் நிரந்தரமாக குடிபெயர்ந்ததால் இவர் சென்னையில் தனது இளங்கலை பட்டம் மற்றும் இவரது மேற்படிப்பினை கற்றுள்ளார். இவரின் சகோதரர் சாகர் 2012-ம் ஆண்டு ஒரு விபத்தில் இறந்துள்ளார்.

திரைப்பட அறிமுகம் / தொடக்கம்

இவர் தனது கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலகட்டத்திலே சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைவதற்கு டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரம் உதவியாக இருந்திருக்கிறது. 
 
இவர் திரையுலகிற்குள் அறிமுகமாவது இவரின் பெற்றோருக்கு ஈடுபாடு இல்லை, இதற்காக எட்டு மாதங்கள் இவருடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிகிறது.

பிரபலம் 

தமிழில் 2008-ம் ஆண்டு பொக்கிஷம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்துள்ளார், அங்கு சில திரைப்படங்கள் நடித்து பிரபலமாகியுள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவரை 2011-ம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் தான் தயாரித்த "வெப்பம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகப்படுத்தினார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. 

கழகு, தோழன், கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா ஆகிய திரைப்படங்கள் இவரை வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தது.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்களை பற்றி அறிய: 

பிறந்தநாள் கொண்டாட்டம்

இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிக் பாஸ் குழு ஒன்று கூடியுள்ளது. மேலும் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர் 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+