கூல் சுரேஷ் - தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.
பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்ட கூல் சுரேஷ், கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் ஆவார். இவர் நடிகர் சிலம்பரசனின் ரசிகர் ஆவார். ஆன்லைன் மீம்ஸ் மற்றும் விமர்சனங்களில் சிக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர், கூல் சுரேஷ்.
திரையுலக அனுபவம்
இவரது திரையுலக ஆரம்ப காலத்தில், முன்னணி நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர். சிலம்பரசன், ஜெயம் ரவி, சூர்யா, பார்த்திபன், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார், கூல் சுரேஷ். பின்னர் இவரது திரைப்பட வாழ்க்கை சரிவை கண்ட நிலையில், நகைச்சுவையான விமர்சனத்தின் மூலம் சமூக வலைதள ஊடகங்களில் பிரபலமாக அறிகிறார்.
பல திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி முடிவில் இவர் கூறும் விமர்சனம், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. இதனால் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் பேசப்படுகிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கூல் சுரேஷ் பங்கேற்றுள்ளார்.