பாத்திமா பாபு பயோடேட்டா

  பாத்திமா பாபு இந்திய திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஆ.இ.ஆ.தி.மு.க என்ற அரசியல் கட்சியின் உறுப்பினரும் ஆவார்.

  அறிமுகம்

  இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

  திரைப்படங்களில் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள இவர், பல திரைப்படங்களுக்கு பின்னர் தொலைக்காட்சி தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

  பிரபலம்

  மலையாள குடும்பத்தை சேர்ந்த இவர், 1968-ல் தமிழகத்தில் உள்ள புதுச்சேரியில் பிறந்துள்ளார். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான இவர், 1996-ம் ஆண்டு கல்கி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.

  பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2004-ம் ஆண்டு மலையாள தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் தமிழில் 2006-ம் ஆண்டு லட்சுமி என்ற சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து தமிழ் திரையுலகிலும் நாடக தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

  தற்போது 2017-ம் ஆண்டு முதல் இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

  பிக் பாஸ்

  இவர் 2019-ஆம் ஆண்டு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.