twitter
    Celebs»Gautham Karthik»Biography

    கௌதம் கார்த்திக் பயோடேட்டா

    கௌதம் கார்த்திக் ஒரு இந்தியத் தமிழ் நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.

    இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார்.

    2013ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

    இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்த்ரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கின்றார்.