twitter

    கெளதம் சுந்தராஜன் பயோடேட்டா

    கெளதம் சுந்தராஜன், பிரபல தமிழ் முன்னணி நடிகரான மேஜர் சுந்தராஜனின் மகனும், தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவார். ஒரு நடன ஆசிரியராக திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது ஒரு முன்னணி குணச்சித்திர நடிகராக பணியாற்றிவருகிறார்.

    பிறப்பு

    கெளதம் சுந்தராஜன், மேஜர் சுந்தராஜன் மற்றும் ஷ்யாமளா என்பவர்களுக்கு மகனாக சென்னையில் பிறந்துள்ளார். 1989ம் ஆண்டு விவேகானந்த கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தினை வென்ற இவர், திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு முன்னர் பல திரைப்பட சார்ந்த பணிகளில் செய்துவந்துள்ளார். பின்னர் கே பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாக அறிமுகமாகி திரைத்துறையில் அறிமுகமானார்.

    1996ம் ஆண்டு கோகிலா ஹரிராம் என்பவரை திருமணம் செய்துள்ள இவர், பின்னர் 1998ம் ஆண்டு தனது மனைவியுடன் நடன பயிற்சிக்கான ஒரு பள்ளியினை உருவாக்கியுள்ளார். இவரது நடனத்தின் மூலம் 2001ம் ஆண்டு கமல் ஹாசனின் "ஆளவந்தான்" திரைப்படத்தில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

    திரையுலக அனுபவம்

    1991ம் ஆண்டு கே பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் பல படங்களில் பல வேடங்களில் நடித்து தமிழில் புகழ் பெற்றுள்ளார்.

    1997ம் ஆண்டு வெளியான மணிரத்னமின் "இருவர்" படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவரது திரைவாழ்வில் ஒரு அடையாளமாக மாறியுள்ளது, இதனை தொடர்ந்து இவர் திரைப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகளில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

    இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் "கண்ணுல காச காட்டப்ப" படத்தின் மூலம் 2016ம் ஆண்டு பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    வெள்ளித்திரையினை தொடர்ந்து இவர் சின்னத்திரையிலும் மர்மதேசம், செல்வி, லட்சுமி, செல்லமே, மற்றும் நந்தினி தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.