ஹிப்ஹாப் தமிழா பயோடேட்டா

    ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும். இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்
     
    ஆதி மைக்கல் ஜாக்சனின் ஜாம் என்ற பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகரானார். பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜீவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்ற இசைக்குழுவை ஆரம்பித்தனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் யூ டூபிலும், ரேடியோவிலும் வெளிவந்தே பிரபலமாயின. 

    தற்செயலாக அனிருத்தை ஆதி சந்திக்க அதன்பிறகு, ஹிப்ஹாப் கலைஞராக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளரானாராக சுந்தர்.சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார். அந்தப் படம் பாடல்களுக்காக ஓரளவு பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார்.