ஜாங்கிரி மதுமிதா பயோடேட்டா

  ஜாங்கிரி மதுமிதா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர். இந்நகைச்சுவை தொடர் வாயிலாக பிரபலமான இவர், 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்.

  பிரபலம் 

  இவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் கதாபாத்திரத்திற்காக இவருக்கு விகடனின் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது பெற்றுள்ளார். இத்திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவர், இப்படத்தினை தொடர்ந்து மிரட்டல், அட்டகத்தி, ராஜா ராணி என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

  திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும், பின்னர் பல நகைச்சுவை தொடர் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  திருமணம்

  இவர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் நாள் மோசெஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துள்ளார். 

  பிக் பாஸ்

  இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இவர் பிக் பாஸ் இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.