twitter
    Celebs»Julie»Biography

    ஜூலி பயோடேட்டா

    ஜூலி (மரியா ஜூலியனா) என்கிற இயற்பெயர் கொண்ட இவர் இந்திய தமிழ் திரையுலகின் நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் 2017-ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்கேற்று பிரபலமானவர். இவர் தொடக்கத்தில் செவிலியராக பணியாற்றிய இவர், 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அப்போராட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் பிரதிபலிப்பு என்கிற தலைப்பின் கீழ் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் பொது இவரை விமரிசித்து பல மீம்ஸ், சர்ச்சை பேச்சுகள் போன்ற விஷயங்களுக்கு உள்ளானார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்கிற குழந்தைகளுக்கான நடன போட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார்.

    இவர் 2018-ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த மன்னர் வகையறா திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் மனப்பெண்ணாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் அம்மன் தாயி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இவர் அம்மா தாயி திரைப்படத்தினை தொடர்ந்து தப்பாட்டம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.