twitter
    Celebs»Kangana Ranaut»Biography

    கங்கனா ரனாத் பயோடேட்டா

    கங்கனா ரனாத் ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார். 2006-ம் ஆண்டு இவரின் முதல் திரைப்படமான "கேங்ஸ்டர்" என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் இத்திரைப்படத்திற்காக 2006-ம் ஆண்டிற்கான பிலிம்பேர்- சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

    தமிழ் திரையுலகில்
    இவர் 2008-ம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த "தாம் தூம்" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் இயக்கி நடித்த மணிகர்ணிகா திரைப்படமானது தமிழிலும் டப் செய்து வெளியானது.

    இவர் 2019-ம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படத்தில் தமிழக முதலமைச்சராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    தற்போது இவர் ஹிந்தி திரைத்துறையில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக இருக்கின்றார். மேலும் இவர் 2015-ம் ஆண்டின் தேசிய அளவில் மிக சிறந்த நடிகை பட்டம் வென்றவர்.

    1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஹிமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் தொழிலதிபர் அமர்தீப்ரானௌட் மற்றும் ஆசிரியர் ஆஷா ரானௌட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். கூட்டு குடுமபத்தில் பிறந்து வளர்ந்த இவர் 2004-ம் ஆண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தற்போது வரை முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.