X
கீர்த்தி சுரேஷ்
Actress

கீர்த்தி சுரேஷ் பயோடேட்டா

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பிறப்பு

கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள கென்டிரியா வித்யாலயா பள்ளியில் இவரின் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தனது இளங்கலை படத்தினை சென்னையில் உள்ள பேர்ல் அகாடமி-யில் பெற்றுள்ள இவர், இவரின் மேல் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு

திரையுலக தொடக்கம்

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பெரிதும் அறியப்படாத இவர், 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து டீமில் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.

அங்கீகாரம்

சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர்.

இவர் 2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+