twitter
    Celebs»Kishore»Biography

    கிஷோர் பயோடேட்டா

    கிஷோர் குமார் ஜி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிஷோர் என்ற பெயரினை கொண்டு திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமாக அறியப்படுபவர்.

    இவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன்  திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு போன்ற வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமானவர்.

    இவர் திரைத்துறை மட்டுமின்றி 2019-ம் ஆண்டு ஹை ப்ரிஸ்ட்ஸ் என்ற ஜீ நிறுவனத்தின் இணையதள தொடரில் நடித்துள்ளார். திரையுலகில் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், தென்னிந்தியாவில் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

    இவர் பெங்களூரில் உள்ள தேசிய கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். பின்னர் நாடக நடிகராக தனது திரைப்பயணத்தை கர்நாடகாவில் தொடங்கியுள்ளார். பின்னர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தனது உயிர் கல்வியினை பயின்றுள்ளார். பின்பு ஆசிரியராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். பொழுபோக்கு காரணமாக இவர் மாடலிங் சென்றுள்ளார்.

    2004-ம் ஆண்டு நாடகம் மற்றும் மாடலிங் தொடர்பை கொண்டு கண்டி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், வெற்றிமாறன் தேசிய நெடுஞ்சாலை திரைப்படத்திற்காக கர்நாடக திரை கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் இருந்தபோது இவரை தேர்வு செய்துள்ளார். பின்னர் வெற்றிமாறனுடன் இவர் அறிமுகமாகி நட்பு கொண்டுள்ளார். பின்னர் இத்திரைப்படமானது கைவிடப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு என்.ஹச் 4 என்ற தலைப்பில் இத்திரைப்படம் வெளியானது.

    தேசிய நெடுஞ்சாலை திரைப்படமானது கைவிடப்பட்டதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை என திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழகத்தில் பல வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமாகியுள்ளார்.
     
    இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், மேலும் விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டவர் ஆவார். தற்போது திரைப்படங்களில் நடித்த பின்னர் இருக்கும் பொழுதுபோக்கு நேரங்களில் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.