X
முகப்பு » பிரபலங்கள் » லதா » பயோடேட்டா
லதா
Actress

லதா பயோடேட்டா

லதா (எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி) என்ற புனைப்பெயருடன் அறியப்படும் இவர் தமிழ் திரையுலகின் நடிகை ஆவார், இவர் 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமான இவர், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1970 முதல் 1980 வரை உள்ள காலகட்டங்களில் தென்னிந்தியா புகழ்பெற்ற முன்னணி நடிகை ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீப காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி நாடக தொடரில் ராஜேஸ்வரி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இவர் ஜூன் 7, 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+