லீலா சாம்சன் பயோடேட்டா

    லீலா சாம்சன் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். தனது கலைநுட்பத்திறனுக்கு பெயர்பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார். இவர் தமிழ் நாட்டிலுள்ள குன்னூரில் பிறந்தவர் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றபின்னர் கலாசேத்திராவில் பரதநாட்டியம் பயின்றார்.

    இவர் 2015-ம் ஆண்டு ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி) திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் கலை துறையில் பத்மஸ்ரீ விருது (1990), தமிழ்நாடு அரசின் நிருத்திய சூடாமணி, கலைமாமணி (2005), சங்கீத நாடக அகாதமி விருது, (1999–2000), நாட்டிய கலா ஆச்சார்யா விருதினை பெற்றுள்ளார்.