X
மனோரம்மா
Actress/Singer/Actor

மனோரம்மா பயோடேட்டா

மனோரமா  தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படுகின்றார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் சில பாடல்களையும் பாடியுள்ளார். 

இவரது இயற்பெயர் கோபி சாந்தா பெற்றோர் காசி 'கிளாக்' உடையார்-ராமாமிர்தம். ராஜமன்னார்குடியில் பிறந்தவர். படித்தது வளர்ந்தது பள்ளத்தூரில் படித்தது 6 ஆம் வகுப்பு வரை. பிறகு நாடக துறையில் சேர்ந்தார். தன்னுடைய 12-ம் வயதில் ஆரம்பித்த கலைபயணம் தற்போது வரை 2015-ம் ஆண்டு வரை ஓயாமல் நடித்து வந்தார். ஆனால், ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரம்மா தன்னுடைய 78-வது வயதில், 10 அக்டோபர் 2015-ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 

ஆச்சியின் பிரிவு தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை சினிமா துறைக்கே ஓர் பேரிழப்பு ஆகும். இவரது மறைவிற்கு பின்பு தமிழ் சினிமா துறையில் இவரது இடத்தை நிரப்ப எவராலும் முடியாது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+