மீரா மிதுன் "தமிழ் செல்வி" என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துரையின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் குறிப்பிடப்படும் சில கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி தனது சமூகவலைத்தள பக்கங்கள் மூலம் பல்வேறு கருத்துகள் மற்றும் இவரது அழகிய புகைப்படங்களை பதிவேற்றி பல ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.
தமிழ் திரைத்துறையில் தமிழ் பெண்ணாக மாடலிங் துறையில் ஜெயித்த மீரா மிதுன், தன்னைப்பொன்றே மாடலிங் ஆசை கொண்ட தமிழ் பெண்கள் எந்தக் கஷ்டங்களும் படக்கூடாது என்று "மிஸ் தமிழ்நாடு திவா" என்ற பெண்களுக்கான மாடெலிங் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
பிரபலம்
சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த இவர், மாடலிங் துறையில் ஐந்து வருடங்களாக கொடிகட்டி பறந்தவர். அந்த புகழினை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடித்த "தானா சேந்த கூட்டம்" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி என பல படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
பிக் பாஸ்
இவர் 2019-ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் 3" தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். மாடல் என்றாலே வெளிநாட்டு, வெளி மாநில பெண் என்ற நிலையை மாற்றி ஒரு தமிழ் பெண் மாடலிங் துறையில் பல சாதனைகளை புரிந்து பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளார். மாடலிங் துறையில் 2016-ஆம் ஆண்டு "மிஸ் தமிழ் நாடு" என்ற பட்டம் வென்றுள்ள இவர், பின் பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் 2019-ஆம் ஆண்டு பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளராக கலந்து கொள்ளவிருந்த நிலையில் சில காரணங்களால் அவர் விலகினார். பின் தமிழ் பிக் பாஸ் குழு அவரது இடத்திற்கு இவரை அழைத்துள்ளது. இவர் பிக் பாஸ் இல்லத்தில் 15-வது போட்டியாளராக 2-வது நாளில் பங்கேற்று 35-வது நாளில் வெளியேறினார்.
திரைப்பட அனுபவம்
கௌதம் மேனனின் என்னை அறிந்தால் (2015) திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தின் த்ரிஷாவின் தோழியாக ஒரு சில காட்சிகளில் இவர் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இவர் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், எலனின் "கிரகணம்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், 8 தோட்டாக்கள் (2017) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையில் அறிமுகமாகினார். தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படமே இவரது முதல் படமாக அமைந்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த "தானா சேந்த கூட்டம்" திரைப்படத்தில் நடிகை கலையரசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ள இவர், பின் போதை ஏறி புத்தி மாறி என பல படங்களில் நடித்து வருகிறார்.