X
மிருணாளினி ரவி
Actress

மிருணாளினி ரவி பயோடேட்டா

மிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு நகல் என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் டபுஸ்மாஷ் என்ற இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். இவரின் டபுஸ்மாஷ் விடீயோக்கள் பிரபலமாக புகழ்பெற்று 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார். இவர் பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றிவந்துள்ளார். டபுஸ்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்துள்ளார். இவர் 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+