X
முரளி
Actor

முரளி பயோடேட்டா

முரளி தமிழ்த் திரைப்பட நடிகர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990-ல் வந்த “புதுவசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+