X
நெல்லை சிவா
Actor

நெல்லை சிவா பயோடேட்டா

நெல்லை சிவா - தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவர் திரைத்துறையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அணைத்து திரையிலும் தனது பங்களிப்பினை ஆற்றி பணியாற்றியுள்ளார்.

நெல்லை சிவா பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த அட்டகாசம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. இதனை தொடர்ந்து இவர் பாணியில் பேசுவது மிமிக்கிரி கலைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

மிகவும் துறுதுறுப்பாக சரளமான தனது வசனங்களால் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல மெகா தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
 
'வைகை புயல்' வடிவேலு அவருடன் இணைந்து இவர் நடித்த 'எனது கிணத்தை காணோம்' நகைச்சுவை காட்சி தமிழ் சினிமாவில் மிக பெரிய புகழ் பெற்ற நகைச்சுவையாகும். இதனை தொடர்ந்து வடிவேலு உடன் இணைந்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, எலி, வெற்றி கொடி கட்டு என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
 
நெல்லை சிவா தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சில திரைப்படங்கள்

  1. அட்டகாசம்
  2. படிக்காதவன்
  3. வெற்றி கொடி கட்டு
  4. சாமி
  5. பாபநாசம்
  6. கிரீடம்
 
இறப்பு

உடல் நல குறைவு 'மாரடைப்பு' காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி 2021 மே 11ல் காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+