twitter

    நெல்சன் திலீப்குமார் பயோடேட்டா

    நெல்சன் திலீப்குமார் இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இவர், திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் உருவான சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றி பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்று தமிழ் சினிமாவில் இயக்குனராக புகழ் பெற்றுள்ளார்.

    பிறப்பு 

    வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர், தனது சொந்த ஊரில் பள்ளி கல்வியினை பயின்று, பின்னர் சென்னையில் உள்ள நியூ கல்லுரியில் 'விஸ்வல் கம்யூனிகேஷன்' என்ற இளங்கலை பட்டம் வென்றுள்ளார்.

    திரையுலக தொடக்கம்

    நெல்சன் திலீப்குமார், தனது இளங்கலை பட்டத்திற்கு பின்னர் திரைக்கதை எழுத்தாளராக 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மற்றும் சில தொடர்களுக்கு பணியாற்றியுள்ளார். 

    2005-ஆம் ஆண்டு அழகி என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ள நெல்சன் திலீப்குமார், அடுத்தடுத்து ஜோடி நம்பர் 1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் என பல நிகழ்ச்சிகளில் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பு குழுவில் இருந்து இயக்கி வந்துள்ளார்.

    வெள்ளித்திரை அனுபவம்

    2010ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான "வேட்டை மன்னன்" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார், நெல்சன் திலீப்குமார். இத்திரைப்படமானது இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம்.

    இவர் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹன்ஷிகா என பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் பிரபலமானது. சிலம்பரசனின் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம், திடீரென சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தான் இயக்கிய முதல் திரைப்படம், பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால், மீண்டும் இவர் படவாய்ப்புகளை இழந்து தனது திரைப்பயணத்தை தொடக்கத்தில் இருந்து துவங்கம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் இனைந்து சில நிகழ்ச்சிகளை இயக்கிவந்துள்ள இவர், பின்னர் 2018-ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற பிரமாண்ட வெற்றி பெற்ற ஒரு நகைச்சுவை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    கோலமாவு கோகிலா

    நெல்சன் திலீப்குமார் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால், தனது திரைப்பயணத்தை மீண்டும் முதலிருந்து ஆரம்பித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்துள்ள இவர், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அறிமுகத்தினை பெற்று ஒரு நட்பினை வளர்த்து வந்துள்ளார்.

    இசையமைப்பாளர் அனிருத், நெல்சன் எழுதிய ஒரு திரைக்கதையை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரோடக்சன்' நிறுவனத்தின் சில முக்கிய புள்ளிகளுடன் கலந்துரையாற்றி இவருக்கு ஒரு திரைப்பட வாய்ப்பினை பெற்று தந்துள்ளார்.

    லைக்கா தயாரிப்பில் உருவான நெல்சன் இயக்கத்தில் உருவான "கோலமாவு கோகிலா" திரைப்படத்திற்காக இசையமைப்பார் அனிருத் நடிகை நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பின்னர் இத்திரைப்படமே நெல்சன் திரைவாழ்வில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

    பிரபலம்

    கோலமாவு கோகிலா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிப்பில் "டாக்டர்" திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இளம் இயக்குனர் பட்டத்தினை விகடன் நிறுவனம் இவருக்கு அளித்துள்ளது. பின்னர் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான "தி டைம்ஸ் ஆஃப் இந்திய" சார்பில் சிறந்த இளம் இயக்குனருக்கான விருதினை பெற்றுள்ளார்.

    இவரின் முதல் தமிழ் திரைப்படமான கோலமாவு கோகிலா விமர்சம் மற்றும் வசூல் ரீதியா மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும், புகழையும் அள்ளித்தந்துள்ளது.