twitter

    ஓமக்குச்சி நரசிம்மன் பயோடேட்டா

    ஓமக்குச்சி நரசிம்மன் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் மெல்லிய உடல் அமைப்பு கொண்டு காணப்பட்டதால் ஓமக்குச்சி என்று அழைக்கப்பட்டார். இவர் இந்திய திரைப்படம் மற்றும் மேடை நாடகங்களில் நடிப்பவர். இவர் ஏறத்தாழ 1500-ற்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 14 மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

    1936-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கும்பகோணத்தில் பிறந்த இவர், குடும்ப வறுமை காரணமாக மேடை நாடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் 1949-ம் ஆண்டு ஔவையார் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி திரைத்துறைக்குள் நுழைந்தவர், பின்னர் 1980-ம் ஆண்டு வரை எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல், கல்வியில் ஆர்வம் கொண்டு திகழ்ந்தார்.

    இவர் சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் புரிந்துள்ளார், இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    இவர் தனது இளங்கலைப் பட்டம் முடிந்ததும், எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் கௌரி கல்யாணம் திரைப்படத்தில் நடித்து மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். 1500-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இறுதியாக சுந்தர் சி நடித்த தலைநகரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    ஓமக்குச்சி நரசிம்மன் 2009 மார்ச் 12ல் தொண்டை புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.