பாயல் ராஜ்புட் பயோடேட்டா

  பாயல் ராஜ்புட் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

  பிரபலம்

  பாயல் ராஜ்புட் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். சின்னத்திரையில் இவர் பெற்ற பிரபலம் கொண்டு பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

  இவர் தற்போது ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பிறமொழி திரைப்படங்களில் நடித்து இந்தியளவில் பிரபலமாகியுள்ளார். இவரின் திரைப்படங்களில் இவர் கிளாமர் காட்சிகளில் அதிகம் நடித்து இந்தியாவில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

  2017-ம் ஆண்டு திரையில் அறிமுகமாகி மிக குறைந்த காலகட்டத்திற்குள் இந்தியளவில் பிரபலமானவர்.


  பிறப்பு / திரையுலக தொடக்கம்

  பாயல் ராஜ்புட் பஞ்சாப்-ல் உள்ள அம்ரிஸ்டர் நகரில் 1992-ம் ஆண்டு ஜூலை 30ல் பிறந்தவர். நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பஞ்சாப் மொழி தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பஞ்சாப் மொழியில் பல தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகியுள்ள இவர், அதன் பிரபலம் கொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்..

  பாயல் ராஜ்புட் 2017-ஆம் ஆண்டு "சன்ன மேரேயே" என்னும் பஞ்சாபி திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் சாரட் என்னும் மராத்தி திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் ஆகும். 

  2018-ஆம் ஆண்டு பாயல் ராஜ்புட் "வீரிய கி வெட்டிங்" என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து ஹிந்தி திரையிலும் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்பதின் மூலம் பிரபலமான இவர், அதே ஆண்டு "ஆர் எக்ஸ் 100" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

  ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு தென்னிந்தியாவில் பல ரசிகர்கள் தோன்றியுள்ளனர்.

  பஞ்சாபி, தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் தனது கவர்ச்சி நடிப்பால் இந்தியளவில் பல ரசிகர்களை கவர்ந்த இவர், ஒவ்வொரு திரையுலகிலும் அறிமுகமாகி வருகிறார்.

  தமிழில் அறிமுகம்

  பாயல் ராஜ்புட் 2017-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகி 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் பல திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பல ரசிகர்களை பெற்று பிரபலமாகியுள்ளார். பாயல் ராஜ்புட் தமிழில் 2019-ம் ஆண்டு ஏன்ஜெல் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின்-ற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.