X
பிரதீப் ஆண்டனி
Actor

பிரதீப் ஆண்டனி பயோடேட்டா

பிரதீப் ஆன்டனி - தமிழ் திரைத்துறையில் நடிகராக அறியப்படுபவர். இவர் திரைப்படங்களில் நாயகன், துணை நடிகர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வாழ் திரைப்படத்தின் மூலம் நாயனாக அறிமுகமான பிரதீப் ஆன்டனி தற்போது பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரதீப் ஆன்டனி பிக்பாஸ் சீசன் 03 நிகழ்ச்சியில் கவினின் நண்பனாக வீட்டிற்குள் வந்தும், பின் கவினை அறைந்ததும் மக்களின் கவனத்தை கவர்ந்து, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

பிறப்பு

பிரதீப் ஆன்டனி, சென்னையில் பிறந்து, அங்கையே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். விஸ்காம் பிரிவில் தனது இளங்கலை பட்டம் வென்றுள்ள பிரதீப் ஆன்டனி, திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு முயற்சித்து வந்துள்ளார்.

திரையுலக அனுபவம்

2016 ஆம் ஆண்டு அருவி படத்தில் ஒரு துணை கதாபாத்திர நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ஆன்டனி, தனது நடிப்பு மற்றும் நேர்த்தியான கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்தார்.

2021 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான வாழ் படத்தில், பிரதீப் ஆன்டனி நாயகனாக நடித்து பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமானார். இத்திரைப்படத்தில் இவர் நடித்துள்ள கதாபாத்திரம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் செம வைரல் ஆனது.

2022 ஆம் ஆண்டு நடிகர் கவின் நடித்த 'டாடா' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறார். அடுத்தடுத்து இவரின் திரைவாழ்க்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பிரதீப் ஆன்டனி பங்கேற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+