X
ரவீனா தாஹா
Actress

ரவீனா தாஹா பயோடேட்டா

ரவீனா தாஹா - தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரின் நெஞ்சங்களை கவர்ந்த பிரபல இளம் நடிகை ஆவார், இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என பல்வேறு துறைகளில் பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்து புகழ் பெற்றுள்ளார்.


ரவீனா தாஹா புகைப்பட கலெக்ஷன்ஸ்


பிறப்பு & திரையுலக தொடக்கம்


ரவீனா தாஹா 2003ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சென்னையில் மலையாள குடும்பத்தில் பிறந்துள்ளார். தனது சிறுவதில்லையே நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள 'தங்கம்' சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அப்பொழுது இவருக்கு 4 வயதாகும்.


திரையுலக அனுபவம்


சிறுவயதில் தங்கம், மௌன ராகம் (சீசன் 02), பூவே பூச்சூடவா என பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ள ரவீனா தாஹா, வெள்ளித்திரையில் 'ராட்சசன்' படத்தில் ஒரு பள்ளி மாணவியாக நடித்து திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.


வெள்ளித்திரை சினியுலகில் இவர், ராட்சசன், எனிமி, பீட்சா 3, ஜீவா, பூஜை, லவ் டுடே என பல திரைப்படத்தில் நடித்து கலக்கியுள்ளார். திரைப்படங்களை தொடர்ந்து தனியார் தொலையாட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அசத்தியுள்ளார்.


குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் கோமாளியாக பங்கேற்று பலர் மத்தியில் வரவேற்பு பெற்றார். பின் ரெடி ஸ்டெடி கோ போன்ற பல்வேறு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.


பிக்பாஸ் போட்டியாளர்


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான 2023 ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பல ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளார், ரவீனா தாஹா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+