X
ராட்சசன்

ராட்சசன்

Action | 05 Oct 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ராட்சசன் கதை

ராட்சசன்  முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு, அமலா பால் நடித்த அதிரடி திரைப்படம்.  கதை :  சினிமா இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அருண் (விஷ்ணு விஷால்), குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக போலீஸ் பணியில் சேர்கிறார். அப்போது ஒரு ராட்சசன், பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார். தனது சினிமா கதைக்காக அருண் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் சைக்கோ கொலைக்காரனை தேட ஆரம்பிக்கிறார். அந்த ராட்சசன் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்? அருண் அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படம்.
Read More

ராட்சசன் நடிகர்கள் & படக்குழுவினர்

ராட்சசன் அணியின் தகவல்

இயக்குனர் ராம்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராட்சசன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையே ராட்சசன் திரைப்படம். பொதுவாக சைக்கோ திரில்லர் படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த ராட்சசனும் அதே டெம்ப்ளேட்டில் தான் நகர்கிறான். ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் வித்தியாசப்படுகிறார் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி எடுத்த இயக்குனரா இந்த படத்தை எடுத்தார் என வியக்க வைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே படம் செம திரில்லிங்காக நகர்கிறது. ராட்சசனின் கொலைகள் நம்மை நடுங்க செய்கிறது. யார் இந்த ராட்சசன் என எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு மிக அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். இப்படத்திற்காக அவர் செய்துள்ள ஆய்வுகள் படம் பார்க்கும் போது தெரிகிறது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி வரை ராட்சசனை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவது அயர்வை ஏற்படுத்தி விடுகிறது. ராட்சனை திரையில் காட்டிய பிறகும், படத்தை நீட்டிக்கொண்டே போவது, தேவையில்லாதது. ஜிப்ரானின் பின்னணி இசை நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. கொலைக்காட்சிகளுக்கு அவர் அமைத்திருக்கும் இசை, மனதை பதைபதைக்கச் செய்கிறது. 'காதல் கடல் தானா' பாடல் ஹைக்கூ. மற்ற பாடல்களும் காதுக்கு இனிமை. ராட்சசனின் தீம் மியூசிக் செம திரில்லிங். இந்த கேரக்டருக்கு ஏன் அமலாபால் என தெரியவில்லை. பெரிய வேலையில்லை என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டன் சாரியில் ஸ்கூல் டீச்சராக வந்திருப்பது கண்களுக்கு குளிர்ச்சி. கிளாமரைவிட இது தான் உங்களுக்கு செட்டாகிறது அமலா. படத்தின் இரண்டு சர்ப்ரைஸ் நடிகர்கள் முனிஸ்காந்த் ராமதாசும், மைனா சூசனும். இருவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். வினோதினியை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் இந்த ராட்சசனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கொடூரக் கொலைகள் செய்யும் இந்த ராட்சசனை தைரியம் இருப்பவர்கள், த்ரில்லர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.

ராட்சசன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ராட்சசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+