twitter
    X
    Home சினி தரவரிசை

    இயக்குனர் மணிரத்னத்தின் சிறந்த திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, June 2, 2022, 09:36 AM [IST]

    மணி ரத்னம், தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர். தமிழ் ரசிகர்கள் பெரிய அளவில் பாராட்டப்படும் இயக்குனர்களில் இவரும் ஒருவராவார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இங்கு இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான படங்ளில் சிறந்த திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட தமிழ் படங்களான தளபதி, நாயகன், இருவர், அஞ்சலி, மௌன ராகம் போன்ற திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. மேலும் இயக்குனர் மணி ரத்னம் திரைவாழ்வில் குறிப்பிடப்படக்கூடிய சில வெற்றி திரைப்படங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.

    cover image
    மௌன ராகம்

    மௌன ராகம்

    1

    தமிழ் ரசிகர்களால் காலத்தை கடந்து கண்டு ரசிக்கப்படும் அழகான காதல் திரைப்படம். மிகவும் எதார்த்தமான திரைக்கதை மற்றும் வசனங்களால் இப்படத்தினை ஒரு அழகான காதல் படமாக உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் இயக்குனர் மணி ரத்னம். தனது முதல் காதலின் தோல்வியில் மனம் உடைந்து இருக்கும் நாயகி குடும்பத்தின் கட்டாயத்தில் இன்னொருவரை மணக்கிறார். பின் இவர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி போராட்டமே இப்படத்தின் கதை. இப்படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் பெரிய அளவில் பிரபலமானார்.

    நாயகன்

    நாயகன்

    2

    தனி மனிதனாக மும்பையில் இருக்கும் சிறுவன் கடந்து வந்த பாதைதான் நாயகன். கமல் ஹாசன் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் போற்றப்பட்டுள்ள திரைப்படம். அதிரடி திரைப்படமாக இப்படம் உருவாகினாலும் மிகவும் ஜனரஞ்சகமான திரைக்கதையில் பிரபலமாகி இன்றும் இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமலின் திரைப்பயணத்தில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு வெற்றி திரைப்படம். இப்படமே நடிகை சரண்யா பொன்வண்ணனின் அறிமுக திரைப்படமாகும். இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

    அக்னி நட்சத்திரம் (1988)

    அக்னி நட்சத்திரம் (1988)

    3

    பிரபு மற்றும் கார்த்தி முத்துராமன் என இரண்டு தமிழ் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவான அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்தின் கதை மிகவும் எதார்த்தமான திரைக்கதையாக என்றாலும் இரு நாயகர்களின் உணர்ச்சி மற்றும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான அழுத்தங்கள் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படம் சுவாரஸ்ய கதைக்களம் கொண்டு உருவாகி தமிழில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள படமாகும்.

    அஞ்சலி

    அஞ்சலி

    4

    பல குழந்தை நட்சத்திரங்களின் முன்னணி நடிப்பில் உருவான அழகான குடும்பத்திரைப்படம். இப்படத்தில் ரகுவரன் மற்றும் ரேவதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் குழந்தைகளுக்கான படமாக இப்படம் உருவாகியுள்ளது. 1990-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பினை பெற்று பெரிய அளவில் பிரபலமான திரைப்படமாகும். இத்திரைப்படம் பல விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளது. இப்படத்தினை நகைச்சுவையாக விமர்சித்து தமிழ் திரையுலகில் பல நகைச்சுவை காட்சிகள் மற்றும் வசனங்கள் உண்டு.

    தளபதி

    தளபதி

    5

    இந்தியாவின் பிரமாண்ட காவியமான மஹாபாரதம் என்னும் நூலில் உள்ள கர்ணன் - துரியோதனன் என்ற இந்த இரு கதாபாத்திரத்தின் நடிப்பினை மையக்கருவாக கொண்டு உருவான திரைப்படம். இப்படத்தில் கர்ணனாக ரஜினியின் கதாபாத்திரமும், துரியோதனனாக மம்முட்டியின் கதாபாத்திரமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதார்த்தமான கதையாக இருப்பினும் நடிப்பு மற்றும் அழுத்தமான வசனங்கள் என இப்படத்தினை பெரிய அளவில் வெற்றி பெற வைத்துள்ளார் இயக்குனர் மணி ரத்னம். இன்றும் ரஜினியின் திரைவாழ்வில் உள்ள ஒரு முக்கிய திரைப்படமாகும். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

    ரோஜா

    ரோஜா

    6

    தேசப்பற்று மற்றும் காதல் என இந்த இரண்டின் மகத்துவத்தை பற்றி கூறியுள்ள திரைப்படம். இப்படத்தின் பலமே இப்படத்தில் இடம் பெற்றுள்ள பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான். இன்றும் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படும் இப்படத்தின் பாடல்கள் இப்படத்தினை பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இப்படத்தின் நாயகியான மதுபாலாவின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து தமிழில் பல படவாய்ப்புகளை பெற்று தந்துள்ள.

    இருவர்

    இருவர்

    7

    தமிழில் புகழ் பெற்ற அரசியல் தலைவர்களான கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரின் நட்பு மற்றும் அரசியல் பயணத்தை பற்றிய திரைப்படமாகும். இப்படம் அதிகாரப்பூர்வமாக இவரது வாழ்க்கையினை அடிப்படையாக கொண்டுள்ள படம் என அறிவிக்கப்படவில்லை எனினும், சாதுரியமாக தமிழ் ரசர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பிரபலமான திரைப்படம். இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். இப்படம் வெளியான 1997-ஆம் ஆண்டு ரசிகர்களால் கவனிக்கப் படவில்லை எனினும் இப்போது தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அலைபாயுதே

    அலைபாயுதே

    8

    மாதவன் மற்றும் ஷாலினியின் முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம். இப்படமானது இன்றும் காதலர்களால் கொண்டாடப்படக்கூடிய திரைப்படமாகும். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் சூப்பர் ஹிட் இசையில் மிக பெரிய அளவில் பிரபலமான திரைப்படம், அழகான பாடல்களால் ரசிகர்களை இன்றும் தன்வசப்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் குஷ்பூ ஒரு முக்கிய கதாபாத்திரமாக கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி)

    ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி)

    9

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற காதல் கதையாக இப்படம் வெளியாகி பிரபலமானது. இப்படம் வெளியான சமயங்களில் பல விமர்சனங்களில் சிக்கி சில சர்ச்சைகளுக்கு உள்ளானது. இப்படத்தில் நாயகன நாயகியாக நடித்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் தமிழ் திரையில் பெரும் வரவேற்பினை இப்படத்தின் மூலம் பெற்றுள்ளார். இப்படத்திக்காக சிறந்த அறிமுக நடிகர் நடிகைக்கான விருதுகளை இவர்கள் பெற்றுள்ளனர்.

    செக்கச்சிவந்த வானம்

    செக்கச்சிவந்த வானம்

    10

    அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சிலம்பரசன், அருண் விஜய், விஜய் சேதுபதி என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் பிரமாண்ட வெற்றி தமிழ் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் எனப்படும் பின்னணி இசை இப்படத்திற்கு பலமாக அமைந்து இப்படத்தினை பிரபலமாக்கியது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில அதிரடி காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X