X
தமிழ் » திரைப்படங்கள் » செக்கச்சிவந்த வானம்
செக்கச்சிவந்த வானம்

செக்கச்சிவந்த வானம்

Action | 27 Sep 2018 | U/A | 143 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

செக்கச்சிவந்த வானம் கதை

செக்கச்சிவந்த வானம்   இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  கதை :  ரவுடியாக வாழ்க்கையை ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்பவர் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). சேனாபதி - ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த்சாமி). அவருடைய மனைவி சித்ரா (ஜோதிகா), துணைவி பார்வதி (அதிதி ராவ் ஹிதாரி). சென்னையில் அப்பாவுக்கு துணையாக அடிதடி வேலைகளை செய்து வருகிறார். இரண்டாவது மகன் தியாகு (அருண் விஜய்). மனைவி ரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் குழந்தைகளுடன் துபாயில் ஷேக்குகளுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் எத்தி (சிம்பு). செர்பியாவில் காதலி சாயாவுடன் (டயானா எர்ரப்பா) இணைந்து ஆயுதம் கடத்தும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இப்போது கதைக்கு போகலாம். தந்தை சேனாபதியின் இடத்தை பிடிக்க மூன்று மகன்களுக்கும் ஆசை. இந்நிலையில் சேனாபதி மற்றும் அவரது மனைவி மீது திடீர் தாக்குதல் நடக்கிறது. இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சேனாபதியை கொல்ல முயன்றது எதிரணியைச் சேர்ந்த சின்னப்பதாஸ் (தியாகராஜன்) என சந்தேகப்படுகிறார் வரதன். உண்மையில் சேனாபதியை கொல்ல முயன்றது யார் என்பதே படத்தின் கதை.
Read More

செக்கச்சிவந்த வானம் நடிகர்கள் & படக்குழுவினர்

செக்கச்சிவந்த வானம் அணியின் தகவல்

இயக்குனர் மணி ரத்னம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் மணி ரத்னம், சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

செக்கச்சிவந்த வானம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு பாராவுக்குள் அடங்கிவிடும் இந்த கதையை தான், முழு நீள படமாக டெவலப் செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 35 ஆண்டுகளில் அவருக்கு இது 26வது படம். இத்தனை ஆண்டுகளாக சினிமா எடுத்துக்கொண்டிருப்பதற்கு, மணிரத்னத்தின் இந்த நிதானம் தான் காரணம். திரைக்கதை, வசனம், பாடல்கள், ரொமான்ஸ் என இது ஒரு அக்மார்க் மணிரத்னம் படம். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பாத்திர படைப்புகள் கச்சிதம். தனது வழக்கமான ஸ்டைலிஷ் காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷன் படம் என்பதற்காக இவ்வளவு வன்முறையும், கொலைகளும் தேவைதானா மணி சார். பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து இப்படம் நிச்சயம் முக்கியமானதாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. பாடிலாங்குவேஜில் மிரட்டுகிறார். விதவிதமான லொகேஷன்கள் கண்ணளுக்கு குளிரூட்டுகின்றன. ஆனால் காதை பிளக்கும் துப்பாக்கி சத்தம் எரிச்சல் அடைய செய்கின்றன. என்ன தான் அண்ணன், தம்பிகளுக்குள் பகை இருந்தாலும், இப்படியா மோதிக்கொள்வார்கள். நிச்சயமாக குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. அதேபோல் படத்தின் மற்றொரு குறை, எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதையும், பழைய க்ளைமாக்சும் தான்.

செக்கச்சிவந்த வானம் செய்திகள்

செக்கச்சிவந்த வானம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

செக்கச்சிவந்த வானம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+